ஆண்களை எடுப்பான தோற்றத்துக்காக விசேட உள்ளாடை : பிரித்தானிய நிறுவனம் தயாரிக்கிறது
பெண்கள் விசேட பிரா மூலம் தமது தோற்றத்தை மெருகூட்டிக்கொள்வதைப் போல், ஆண்களின் தோற்றத்தையும் ‘எடுப்பாக’ காட்டுவதற்காக ஆண்களுக்கான விசேட உள்ளாடையை பிரிட்டனைத் தளமாகக் கொண்ட பிரபல உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனமொன்று வடிவமைத்துள்ளது.
இந்த உள்ளாடையை அணிந்துகொண்டால் ஆண்களின் எடுப்பான தோற்றத்துடனும் தன்னம்பிக்கையுடனும் காணப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
ஆன் சம்மர்ஸ் எனும் நிறுவனம் வடிவமைத்த இந்த உள்ளாடைக்கு ட்ரிபிள் பூஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்நிறுவனம் ட்ரிபிள் பூஸ்ட் எனும் பெயரில் பிராவை தயாரித்து விற்பனை செய்கின்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து ஆண்களின் பக்கம் தமது பார்வையை திருப்பியுள்ளது இந்நிறுவனம்.
இந்நிறுவனத்தால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பொன்றில் பங்குபற்றிய 1000 ஆண்களில் சுமார் 47 சதவீதமானோர் தமது அந்தரங்கப்பகுதியின் தோற்றம் குறித்து தன்னம்பிக்கை கொள்ளவில்லை எனக் கூறியுள்ளனராம்.
இந்நிலையில் ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உள்ளாடை ஏப்ரல் முதலாம் திகதி முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆண்கள் எத்தனை சதவீதமானோர் இந்த உள்ளாடையை வரவேற்பர் என்பது தெரியவில்லை.
Average Rating