உயிருக்காக போராடிய தாயை காப்பாற்றிய 2வயது பாலகன்

Read Time:1 Minute, 55 Second

002dஉயிருக்காக போராடிய தனது தாயாரை அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்து அவரது உயிரைக் காப்பாற்றிய 2வயது பிரித்தானிய பாலகன் ஒருவனுக்கு திங்கட்கிழமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

லெயிசெஸ்டாஷியரைச் சேர்ந்த றிலி வார்ட் என்ற பாலகனே தனது தாயாரான டனா ஹென்றி மயங்கி விழுந்த நிலையில் தொலைபேசியில் 999 இலக்கத்தை அழுத்தி அவசர சேவைப் பிரிவினரை தொடர்பு கொண்டுள்ளான்.

எவ்வாறு அவசர சேவைப் பிரிவுக்கு அழைப்பு விடுப்பது என தனது பெற்றோர் ஏற்கனவே தனக்கு கற்பித்திருந்ததை ஞாபகத்தில் வைத்தே பாலகன் மேற்படி தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளான்.

தொலைபேசியில் பாலகன் தனது தாய் உறங்குவதாக தெரிவிக்கவும் அவனது அழைப்பை அலட்சியம் செய்ய விரும்பாத அவசர சேவைப் பிரிவினர் அம்புலன்ஸ் வண்டி சகிதம் சம்பவம் இடத்திற்கு சென்றனர்.

இதனையடுத்து அங்கு மயக்க நிலையில் விழுந்து கிடந்த டனா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் உயிர் பிழைத்தார்.

இந்நிலையில் பாலகனான நிலியின் செயற்பாட்டை கௌரவிக்கும் வகையில் ஈஸ்ட் மிட்லான்ட்ஸ் அம்புலன்ஸ் சேவை அவனுக்கு திங்கட்கிழமை விருதொன்றை வழங்கி கௌரவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது
Next post புலம்பெயர் அமைப்புகள் மீதான தடைக்கு, உலக தமிழர் பேரவை கண்டனம்