புலம்பெயர் அமைப்புகள் மீதான தடைக்கு, உலக தமிழர் பேரவை கண்டனம்

Read Time:1 Minute, 47 Second

uk.tamilarபுலம்பெயர் அமைப்புகளை தமழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பயங்கரவாத நிறுவனங்கள் என அவற்றைத் தடை செய்வதற்கு இலங்கை அரசு எடுத்த முடிவு வெட்கக்கேடானது என உலக தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

இவ் நடவடிக்கை இலங்கையில் யுத்தத்தின் போதும் மனித உரிமை மீறல்,நீதி, பொறுப்புக் கூறல் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கு முயற்சிப்போரை அச்சுறுத்தி மௌனிக்கச் செய்யும் முயற்சியாகவே இது அமைவதாக உலகத் தமிழர் பேரவையின் கொள்கை வகுப்பு ஆலோசகர் ஜோன் ரியன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கில் புலிகளை மீளக் கட்டியெழுப்பும் முயற்சியைத் தடுப்பதற்காகவே இந்தத் தடை நடவடிக்கை என்கிறது அரசு.

ஆனால், யாருமே மீண்டும் ஆயுதப் பிணக்குக்குச் செல்ல விரும்பவில்லை. அப்படிச் செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க மிக உண்மையான ஆதாரம் ஒன்றைக்கூட அரசினால் சமர்ப்பிக்க முடியாதுள்ளது.

.அரசின் இந்த நடவடிக்கை இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேலும் மிக மோசமாக்கி பொறுப்புக் கூறல் மற்றும் மீள் நல்லிணக்க செயற்பாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிருக்காக போராடிய தாயை காப்பாற்றிய 2வயது பாலகன்
Next post வாளோடு திரிந்தார் எழிலன்; யாழில் சுவரொட்டிகள்..