வெளிவிவகார அமைச்சரின் இந்திய விஜயம்

Read Time:1 Minute, 35 Second

mankalasamaravira.gifவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை இந்தியாவுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இந்திய பாதுகாப்புச் செயலர் என்.கே. நாராயணனை அவர் சந்தித்து இலங்கையின் பாதுகாப்பு நிலைவரம் குறித்து விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.கருணாநிதியையும் அமைச்சர் மங்கள சமரவீர சந்திக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இலங்கை இனப்பிரச்சினையில் இந்திய மத்திய அரசாங்கம் தலையிட வேண்டுமென்று அரசாங்கமும், தமிழக அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

இதனையடுத்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தமது பிரதிநிதியாக பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணனை தமிழகத்திற்கு அனுப்பிவைக்க முடிவெடுத்துள்ளதாக தமிழக முதல்வர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலையின் பின்னர் முதன்முறையாக இந்தியா தற்போது இலங்கையின் காட்டும் அதிக முனைப்பு இதுவென்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இராக்கிலிருந்து ஜப்பான் படை விரைவில் வாபஸ்: பிரதமர் தகவல்
Next post நோர்டிக் நாடுகளின் பதில் யூன் 29 இல் வெளியாகும்: ஹான்ஸ் பிறட்ஸ்கர