நடிகை நக்மாவிற்கு, காங்கிரஸ் உறுப்பினர் முத்தம் கொடுத்ததால்; மேலதிக பாதுகாப்பு கோரல்

Read Time:1 Minute, 53 Second

nagma (1)இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மாவுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மீரட் தொகுதியில் போட்டியிடும் நக்மாவுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், அவரது பாதுகாப்புக்கு தேர்தல் ஆணையம் கூடுதலாக பாதுகாப்பு பணியாளர்களை ஒதுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நடிகை நக்மா தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும் போது, பொதுமக்களில் சிலர் அவரிடம் தவறாக நடப்பதாகவும் முண்டி அடித்துக் கொண்டு அவரை நெருங்குவதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதனால் பல முறை பதற்றமான சூழ்நிலை உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நக்மா தேர்தல் பிரசாரம் செய்ய சென்ற இடத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜ்ராஜ் சிங் அவரது முகத்தை இழுத்து தன் முகத்துக்கு அருகில் வைத்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கஜ்ராஜ் நக்மாவுக்கு முத்தம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து நடந்த பிரசார கூட்டத்தில் நக்மா தன்னிடம் தகாத முறையில் நடந்த ஒருவரை கன்னத்தில் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகளிருக்கான இருபதுக்கு20 நிரல்படுத்தல்; சகலதுறை பட்டியலில் முதலிடத்தில் இலங்கை அணித்தலைவி
Next post கென்யாவின் முஸ்லிம் மதகுரு மகபுரி சுட்டுக் கொலை