உல்லாசமாக ஓர் உலக சாதனை!! (PHOTOS)

Read Time:2 Minute, 12 Second

50401தொழில் ரீதியாக பரப்பரப்பாக காணப்படும் பலர் பொழுதுபோக்குகளிலும் உல்லாசங்களில் ஈடுபடுவதற்கு நேரம் கிடைப்பதில்லை என்பார்கள். ஆனால், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான சேர் ரிச்சர்ட் பிரான்ஸன் இதில் மிக மிக வித்தியாசமானவர்.

63 வயதான ரிச்சர்ட் பிரான்ஸன், பிரிட்டனின் வேர்ஜின் குழுமங்களின் ஸ்தாபகர். இக்குழுமத்தில் சுமார் 400 கம்பனிகள் உள்ளன. பிரபல விமான சேவை நிறுவனமாமன வேர்ஜின் அட்லாண்டிக் எயார்வேஸ் நிறுவனம் முதல் விண்வெளிக்கு உல்லாசப் பயணிகளை அழைத்துச் செல்லத் தயாராகும் முதல் தனியார் நிறுவனமான வேர்ஜின் கலெட்டிக் நிறுவனம் வரை இவற்றில் அடங்கும்.

460 கோடி டொலர் சொத்துக்களை கொண்ட சேர் ரிச்சர்ட் பிரான்ஸன் பிரிட்டனின் 6 ஆவது பெரும் செல்வந்தர் என 2012 ஆம் ஆண்டு போர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டிருந்தது.

ஆனால், தனிப்பட்ட ரீதியாகவும் உல்லாசப் பயணங்களிலும் சாகசப் பயணங்களிலும் ஈடுபடுவதற்கு அவர் தயங்கியதேயில்லை.

ஜப்பானிலிருந்து கனடாவுக்கு பலூனில் பறந்தமை உட்பட பல உலக சாதனைகளை படைத்தவர் இவர். கடந்த மாதம் ஒற்றை ‘கைட்ஸ்சேர்ப்பிங்’ பலகையில் பிரான்ஸனும் ஜேர்மன் கைட்ஸ்சேர்பிங் சம்பியன் சுசிமாய், அலிஸ் காலியர்ஸ், அலிஸன் டிஸ்பல்ட்ரோ ஆகிய 3 யுவதிகளும் ஒன்றாக பயணித்தனர். இதன்மூலம் ஒரே கைட்ஸ்சேர்பிங் பலகையில் அதிக எண்ணிக்கையானோர் பயணித்த புதிய கின்னஸ் சாதனைக்கு இவர்கள் சொந்தக்காரர்களாகியுள்ளனர்.

50401

50403

50404

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்கில் தொங்கிய நிலையில், மாணவி சடலமாக மீட்பு
Next post விமானத்தை பைலட்கள் கடத்தவில்லை, பயணிகள் எங்கோ உயிருடன் உள்ளனர்: மாஜி சிப்பந்தி