911 அவசர உதவி, சேவையில் இணைந்த முதல் நாளே, தந்தையை காப்பாற்ற உதவிய தொலைபேசி இயக்குநர்

Read Time:1 Minute, 48 Second

5055123அமெரிக்காவின் 911 அவசர உதவிச் சேவையில் வேலை வாய்ப்பு பெற்ற பெண்ணொருவர் முதல் நாளே குடும்பத்திடமிருந்து வந்த சோதனையான தொலைபேசி அழைப்பினை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளார்.

கிரிஸ்டல் மொரொவ் என்ற பெண் பயிற்சிகளை முடித்துவிட்டு கடந்த திங்கள் கிழமை பணியில் இணைந்துகொண்டுள்ளார். அன்று திருட்டு, தீவிபத்து உள்ளிட்ட சில அழைப்புகளுக்கு பதிலளித்துள்ளார்.

4 மணித்தியாலங்களின் பின்னர் நன்கு அறிந்த குரல் அழைப்பு ஒன்றுக்கு பதிலளித்த கிரிஸ்டல் அது தன்னுடைய ‘அன்டி’ என புரிந்துகொண்டுள்ளார்.

கிரிஸ்டலின் தந்தைக்கு ஹைபோகிளிசீமியா (நீரிழிவு தொடர்பான உடற்கோளாறு) ஏற்பட்டுள்ளதாக கூறி உதவி கேட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த கிரிஸ்டல் தனது பயிற்சிகளை பிரயோகித்து பதற்றப்படாமல் செயற்பட்டு படிமுறையான உதவிகள் மூலம் அம்பியூலன்ஸ் அனுப்பி தந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

முதல் நாளில் வீட்டிலிருந்த வந்த அழைப்பை எதிர்கொள்வது கடினமாது. ஆனால் கிரிஸ்டல் சிறப்பாக செயற்பட்டதாக கிரிஸ்டலின் பயிற்சியாளர் டேனியல்லா ஹார்வி பராட்டு கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகள் இயக்க முக்கிய பொறுப்பாளர், நந்தகோபன் மலேசியாவில் கைது! இலங்கைக்கு நாடு கடத்தல்!!
Next post இந்து மத கைதிக்கு, தந்தையின் இறுதி சடங்கை செய்ய அனுமதித்த பிரிட்டிஷ் நீதிமன்றம்