இன்று மோடி – விஜய் சந்திப்பு

Read Time:2 Minute, 14 Second

8776414இன்று மாலை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் சந்திக்க இருக்கிறார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று தமிழகத்தில் இரண்டாம் கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார். கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய இடங்களில் நடைபெறும் பிரச்சாரப் பொது கூட்டங்களில், வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

கடந்த முறை சென்னை பிரச்சார பொது கூட்டத்திற்கு வந்த போது, நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல என்று ரஜினி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நரேந்திர மோடியை, நடிகர் விஜய் கோயம்புத்தூரில் சந்திக்க இருக்கிறார். விஜய்யை சந்திக்க வேண்டும் என்று நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.

அந்த அழைப்பை ஏற்று இன்று மாலை கோயம்புத்தூரில் மோடியை சந்திக்க இருக்கிறார் விஜய். இதனை நடிகர் விஜய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் உறுதி செய்து இருக்கிறார்.

“அரசியல் சார்பு அல்லாத சந்திப்புக்காக நரேந்திர மோடி எனக்கு அழைப்பு விடுத்துள்ளதில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்- விஜய்” என்று தெரிவித்து இருக்கிறார்.

பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ரஜினியைத் தொடர்ந்து விஜய்யையும் சந்திக்க இருப்பதால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு உண்டாகி இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனநலன் குன்றிய மகனின் தாக்குதலில் தாய் பலி
Next post திருடனைத் தாக்கிய சுவிஸ் பொலிஸுக்கு நேர்ந்த கதி