பிரேசில் நாட்டில் ஆண் இனப்பெருக்க உறுப்பு கொண்ட, பெண் பூச்சி கண்டுபிடிப்பு

Read Time:4 Minute, 24 Second

71582_webபிரேசில் நாட்டில் ஆண் பூச்சிகளில் பெண் இனப்பெருக்க உறுப்புகளும் மற்றும் பெண் பூச்சிகளில் ஆண் இனப்பெருக்க உறுப்புகளும் உள்ளன என்பதை உயிரியியலாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

பிரேசில் நாட்டில் குகைகளில் வசிக்கும் 4 பூச்சி இனங்களை அறிவியலாளர்கள் கண்டறிந்து அவற்றை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஆண் மற்றும் பெண் பூச்சி இனங்களில் இனப்பெருக்க உறுப்புகள் மாறி இருந்துள்ளன என்பது கண்டறியப்பட்டு உள்ளது.

அதன்படி, ஆண் பூச்சிகளில், பெண் பூச்சிகளுக்கு இருப்பது போன்று வெஜினா எனப்படும் பெண் இனப்பெருக்க உறுப்பும் மற்றும் பெண் பூச்சிகளுக்கு ஆண் பூச்சிகளில் இருப்பது போன்று ஆண் இனப்பெருக்க உறுப்புகளும் உள்ளன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த பூச்சிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும்போது, ஆண் பூச்சிகளில் இருந்து ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் பெண் பூச்சிகளுக்குள் செலுத்தப்படுவதுடன், ஆண் பூச்சிகளின் விந்தணுவும் செல்கிறது.

ஊட்டச்சத்து அதிகம் கிடைக்காத சூழலில் குகை பகுதிகளில் வாழும் இந்த பெண் பூச்சிகளுக்கு ஆண் பூச்சிகளில் இருந்து நேரடியாக ஊட்டச்சத்து கிடைக்கிறது. மேலும், ஆண் பூச்சிகளிடமிருந்து விந்தணுவையும் பெற்று கொள்கிறது.

இந்த பூச்சி இனங்கள் தங்களுக்கு இடையே 40 முதல் 70 மணி நேரம் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபட கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆச்சரியத்தக்க விசயம் இதனுடன் முடிந்து விடவில்லை.

பெண் பூச்சியானது ஆண் இனப்பெருக்க உறுப்பை போன்ற கைனோசோம் எனப்படும் உறுப்பை இனப்பெருக்கத்திற்கு ஏற்ப தயார்படுத்துகிறது. அதனை சுற்றி உள்ள முட்கள் போன்ற அமைப்புகள் ஆண் பூச்சிகளை உறுதியாக பிடித்து கொள்ள உதவுகிறது. இந்நேரத்தில், அந்த ஜோடியை பிரிக்க முற்பட்டால் ஆண் பூச்சியின் வயிறு பகுதி கிழிந்து விடும்.

அந்த ஜோடிகளின் உறுப்புகள் பூட்டு போட்டது போன்று தொடர்ந்து இருக்கும். வெள்ளை சிலந்தி பூச்சிகளில் இனப்பெருக்கம் முடிவு பெற்றபின் ஆண் பூச்சிகள் அதற்கு அடையாளமாக மற்றும் வேறு ஆண் பூச்சிகள் ஊடுருவ முடியாத வகையில் தனது ஆண் இனப்பெருக்க உறுப்பினை பெண் இனப்பெருக்க உறுப்பிலேயே கத்தரித்து விட்டு விடும்.

அதுபோன்று, அறிவியலாளர்களின் புதிய பூச்சி இன கண்டுபிடிப்பின் செயல்பாடும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அமைந்துள்ளது. நியோடிராக்லா ஜீனஸ் வகையை சேர்ந்த இந்த புதிய பூச்சி இனத்தினை குறித்து வெளிஉலகிற்கு தெரியாமல் போய் இருக்கும்.

ஏனென்றால், பிரேசில் நாட்டின் லாவ்ராஸ் மத்திய பல்கலை கழகத்தை சேர்ந்த ரோட்ரிகோ பெரைரா என்பவர் தலைமையிலான குழு வேறு ஒரு பூச்சி இனத்தை குறித்த ஆய்வினை மேற்கொண்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது, ஜெனீவாவில் உள்ள ஆய்வகத்திற்கு குழு சேகரித்துள்ள மாதிரிகளை பெரைரா அனுப்பி உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சியில் யுவதி கொலை; படைவீரருக்கு விளக்கமறியல்
Next post இந்தி படத்தில் நீச்சல் உடையில் தமன்னா..