அமெரிக்க அழகியை நடனமாட வற்புறுத்திய, மாணவன் சஸ்பெண்ட்

Read Time:2 Minute, 6 Second

020000357_SexyAngelமிஸ் அமெரிக்கா அழகி பட்டம் வென்றவர் நினா டவுலூரி. அமெரிக்க வாழ் இந்தியர். இவர் பென்சில் வேனியாவில் உள்ள சென்ட்ரல் பார்க் உயர்நிலைப்பள்ளிக்கு ஒரு விழாவில் பங்கேற்க வந்திருந்தார்.

அங்கு அவர் மாணவர்கள் மத்தியில் கலாசார வேற்றுமை, அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பாடத்தின் முக்கியத்துவம் குறித்து பேச இருந்தார். அதற்கு முன்னதாக மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.

அப்போது பாட்ரிக் பார்வெஸ் (18) என்ற மாணவன் அழகி நினா டவுலூரியை மேடையில் நடனமாடும்படி வலியுறுத்தினான். மேலும் மேடைக்கு சென்று அவரிடம் பிளாஸ்டிக் பூ ஒன்றையும் பரிசளித்தான்.

மாணவன் பாட்ரிக்கின் இச்செயலை கண்டு அழகி நினா டவுலூரி கோபம் அடையவில்லை. மாறாக சிரித்து சமாளித்தார். அதை பார்த்து சக மாணவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

ஆனால் இது பள்ளி நிர்வாகத்துக்கு எரிச்சலையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவனை பள்ளியில் இருந்து 3 நாட்கள் சஸ்பெண்டு (தற்காலிக நீக்கம்) செய்து உத்தரவிடப்பட்டது.

அழகியை மேடையில் நடனமாட சொல்ல திட்டமிட்டிருந்த விஷயம் ஏற்கனவே ஆசிரியர்களுக்கு தெரிந்தது. எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கண்டித்தனர். அதையும் மீறி மாணவன் பாட்ரிக் இதுபோன்று நடந்து பிரச்சினையில் மாட்டிக் கொண்டான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளுக்காக காணி வாங்கிய மூதாட்டியே, கைது செய்யப்பட்டார் -பொலிஸ் பேச்சாளர்!
Next post பேஸ்புக் ஊடாக யுவதியின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட இளைஞன் கைது!