இலங்கை ஐ.நா.வில் பட்டியலிட்ட 16 வெளிநாட்டு அமைப்புகளும், 424 தமிழர்களும் பற்றிய விளக்கம்!

Read Time:3 Minute, 5 Second

ltte.nediyavan-kopi.alljpgவெளிநாடுகளில் இயங்கும் 16 தமிழ் அமைப்­புகள், மற்றும் 424 தமி­ழர்களின் பெயர் விப­ரங்கள் அரசு ஆணையில் வெளியானது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார், இலங்கை ராணுவப் செய்தித் தொடர்பாளர், பிரி­கே­டியர் ருவான் வணிகசூரிய.

இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கொடுத்த விளக்கம்:

ஐ.நா. பாது­காப்பு சபையில் 2011-ம் ஆண்டு செப்­டெம்பர் தாக்­கு­தலை தொடர்ந்து 1267 மற்றும், 1373-ம் இலக்கம் கொண்ட இரு சட்டமூலங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

அதில் ஒன்று தலிபான் மற்றும் அல்-காய்தா அமைப்­புக்­க­ளை தடை செய்­வ­து, மற்றும் அந்த பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்­பு­டைய நபர்கள் மற்றும் அமைப்­புக்­களை இனம்கண்டு அவற்­றுக்கு எதி­ராக சர்வதேச அளவில் செயல்படுவது.

இரண்­டா­வது, வெவ்வேறு நாடுகளில் செயல்­படும் பயங்­க­ர­வாத இயக்கங்கள், மற்றும் நபர்களை பட்டியலிட்டு, சர்வதேச அளவில் நடவடிக்கை எடுப்பது. இதுதான், 1373-ம் இலக்கம் கொண்ட சட்டமூலம்.

இந்த இரு சட்டமூலங்கள் தொடர்­பாகவும், ஐ.நாவில் அங்கம் வகிக்கும் ஒவ்­வொரு நாட்­டிலும் பிரதிநிதிகள் நிய­மிக்­கப்பட்டு அவை அமல் செய்­யப்­படு­கிறது.

1267-ம் இலக்க சட்டமூலம் தொடர்பாக இலங்கை பிரதிநிதி­யாக மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­விதரன (உளவுப்பிரிவின் தலைவர்) உள்ளார்.

1373-ம் இலக்க சட்டமூலம் தொடர்பாக இலங்கை பிரதிநிதி­யாக பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷே உள்ளார்.

இந்த 1373-ம் சட்டமூலத்துக்கு அமையவே, பாது­காப்பு செய­லா­ள­ரினால் 16 அமைப்­புக்­களும் 424 தனி நப­ர்­களும் பயங்கரவாதத்துடன் தொடர்பானவர்கள் என ஐ.நா.வில், பட்டியலிடப்பட்டுள்ளனர்.

பட்டியலில் உள்ள யாராவது, தாம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல என்றால், ஐ.நா.வின் இலங்கை பிரதிநிதிகளை அணு­கு­வதன் மூலம், ஆதா­ரங்­களை முன்­வைத்து, தாம் நிர­ப­ரா­திகள் என நிரூபித்து, பட்டியலில் இருந்து தமது பெயரை நீக்கிக் கொள்ள முடியும்.

எனினும் இலங்கை தடை செய்த 16 வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களும், 424 தனி நபர்களிலும் எவரும் இதுவரை தம்மை விடுவித்துக் கொள்ள முன்வரவில்லை” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘பேஸ்புக்’ தோழியுடன் கணவன் ஓட்டம்; கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார்!
Next post 8 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த இளைஞருக்கு விளக்கமறியல்