ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது ஐவரி கோஸ்ட்

Read Time:2 Minute, 28 Second

W.Football.jpg`சி’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட்- செர்பியா அணிகள் மோதின. இரு அணிகளும் தான் மோதிய இரண்டு லீக் ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து 2-வது சுற்று வாய்ப்பை இழந்திருந்தன. ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற கணக்கில் களம் இறங்கின. 10-வது நிமிடத்தில் செர்பியாவின் ஸ்டான் கோலிக் அடித்த பாசை நிக்கோலே எளிதாக கோல் அடித்தார். மேலும் ஒரு கோலை 20-வது நிமிடத்தில் செர்பியா அடித்தது. இந்த கோலை சசாலிக் அடித்தார். கடுமையான போராட்டத்துக்குப் பின் 31-வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட்டின் டிடேன் அருனா அருமையான முறையில் கோல் அடித்தார். முதல் பாதியில் செர்பியா 2-1 என முன்னிலைப் பெற்றது.

2-வது பாதியில் ஆட்டத்தின் முழு கட்டுப்பாட்டையும் தனது கையில் ஐவரி கோஸ்ட் வைத்திருந்தது. 67-வது நிமிடத் தில் டிஷ்டன் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் ஐவரி கோஸ்ட் 2-2 சமநிலை பெற்றது. இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பானது.

4-வது நிமிடமே ஆட்டம் முடிய மீதம் இருந்த நிலையில் ஐவரி கோஸ்டின் காலு கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். அதன் பிறகு செர்பியா வீரர்களால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் ஐவரி கோஸ்ட் 3-2 என்ற கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது. முதன் முறையாக இந்த உலககோப் பையில் ஆடிய ஐவரி கோஸ்ட் முதல் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் ஐவரி கோஸ்ட் 3 புள்ளிகள் மட்டுமே பெற்று தொடரை விட்டு வெளியேறியது. `சி’ பிரிவில் அர்ஜென்டினா -ஆலந்து அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்தோனேஷியாவில் மழை வெள்ளத்துக்கு 114 பேர் பலி
Next post நெருக்கடியில் களம் இறங்கும் பிரான்சு 2-வது சுற்றுக்கு தகுதி பெறுமா?- டோகாவுடன் நாளை பலப்பரீட்சை