(PHOTOS) 1,300 கோடி ரூபா சொத்து கொண்ட, நடிகர் ரிச்சர்ட் கேரை பிச்சைக்காரர் என எண்ணி, மிஞ்சிய பீட்ஸா கொடுத்த பெண்

Read Time:4 Minute, 40 Second

53141ஹொலிவூட் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவரான ரிச்சர்ட் கேரை பிச்சைக்காரர் என எண்ணிய சுற்றுலா பயணியான பெண்ணொருவர் தான் உட்கொண்டு மீதம் வைத்த பீட்ஸாவை ரிச்சட் கேருக்கு வழங்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

64 வயதான நடிகர் ரிச்சர்ட் கேர் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். அவரின் சொத்து மதிப்பு சுமார் 10 கோடி டொலர் (சுமார் 1,300 கோடி ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரைப்படமொன்றில் பிச்சைக்காரர் வேடத்தில் ரிச்சர்ட் கேர் நடித்துக் கொண்டிருந்தார் என்பது அப்பெண்ணுக்கு பின்னர் தெரியவந்தது.

‘டைம் ஒவ் மைன்ட்’ எனும் படப்பிடிப்பு நியூயோர்க் நகர ரயில் நிலையமொன்றுக்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பிச்சைக்காரர் வேடத்தில் நடிக்கும் நடிகர் ரிச்சர்ட் கேர், வீதியிலுள்ள குப்பைத் தொட்டியைக் கிளறி உணவு தேடும் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அக்காட்சியை பார்த்த பிரெஞ்சு சுற்றுலா பயணியொருவர், பிச்சைக்காரர் தோற்றத்திலிருந்த மனிதர் மீது பரிதாபப்பட்டு, எஞ்சியிருந்த பீட்ஸாவை அந்த மனிதரிடம் வழங்கினார்.

பிச்சைக்காரர் என தான் எண்ணிய நபர் நடிகர் ரிச்சர்ட் கேர் என்பதை அறியாமலேயே, அப்பெண் அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ரிச்சர்ட் கேருக்கு தான் பீட்ஸா வழங்கும் காட்சி அடங்கிய படம் வெளியான பின்னரே அவர் உண்மையை உணர்ந்து கொண்டார்.

மேற்படி சுற்றுலா பயணி பாரிஸ் நகரைச் சேர்ந்த கெரின் வல்னெய்ஸ் கோம்பியூ என பின்னர் இனம் காணப்பட்டார். தனது கணவர் மற்றும் 15 வயதான மகனுடன் நியூயோர்க்கு சுற்றுலா சென்றிருந்த போதே இந்த அனுபவம் ஏற்பட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

‘நான் அவரிடம் பீட்ஸா அடங்கிய பையை கொடுத்தபோது, அவர் பைக்குள் என்ன இருக்கிறது எனக் கேட்டார். நான் ஆங்கிலத்தில் பேச முயன்றேன். ஆனால், பாதி பிரெஞ்சு கலந்துதான் வார்த்தைகள் வந்தன.

‘மன்னிக்கவும் பீட்ஸா குளிராக இருக்கிறது என அவரிடம் கூறினேன். அவர், உங்களுக்கு மிக்க நன்றி. கடவுள் உங்களை ஆசிர்வாதிப்பார்;எனக் கூறினார்’ என்கிறார் கெரின் வெல்னெய்.

‘இது ஒரு மாயாஜாலமான, வேடிக்கையான கதை. இப்படியும் வாழ்வில் சம்பவம் நடக்கும் என எண்ணமுடியவில்லை’ எனவும் கெரின் வெல்னெய்ஸ் தெரிவித்துள்ளார்.

ரிச்சர்ட் கேர் நடித்து வெற்றிபெற்ற பிரிட்டி வுமன் மற்றும் சிகாக்கோ போன்ற திரைப்படங்களை தான் பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். நுடிகர் ரிச்சர்ட் கேர் இந்த வயதிலும் மிக கம்பீரமாக காணப்படுவதாகவும் கெரின் கூறியுள்ளார்.

1975 ஆம் ஆண்டு முதல் ஹொலிவூட் திரைப்படங்களில் நடித்து வருபவர் ரிச்சர்ட் கேர். அமெரிக்காவின் பிரபல மொடல் அழகி சிண்டி கிராவ்டை 1991 ஆம் ஆண்டு திருமணம் செய்த ரிச்சர்ட் கேர் 1995 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

பின்னர் நடிகை கெரி லோவலை 2002 ஆம் ஆண்டு அவர் திருமணம் செய்தார். கடந்த வருடம் இத்தம்பதியினர் பிரிந்தனர்.

53142

85th Annual Academy Awards - People Magazine Arrivals

53144

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மது விருந்தில் நிர்வாண நடனம்: நடிகை சன்னி லியோன் கைது ஆவாரா?
Next post கர்ப்பமாக இருப்பதை அறியாது, பிறந்த குழந்தையை மலசலகூடத்தில் தண்ணீர் பாய்ச்சி வெளியேற்ற முயன்ற தாய்