அரைகுறையாக மரணதண்டனை நிறைவேற்றம் நிறுத்தப்பட்ட கைதி, மாரடைப்புக்குள்ளாகி மரணம்

Read Time:1 Minute, 41 Second

002qஅமெரிக்க ஒக்லஹோமாவில் மரண தண்டனை நிறைவேற்றத்துக்கான நச்சு ஊசி மருந்து சரியாக செயற்படாததால் மரணதண்டனை பிற்போடப்பட்ட கைதிகளில் ஒருவர் மாரடைப்புக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.

கிளேடொன் லொக்கேட் (38 வயது) என்ற மேற்படி கைதிக்கு நாளமொன்றில் ஏற்பட்ட செயலிழப்பானது அவருக்கு உடலில் நச்சு ஊசி மருந்து முழுமையாக செயற்படுவதை தடுத்ததால் 20 நிமிடங்களின் பின் அவரது மரணதண்டனை அரைகுறை நிலையில் நிறுத்தப்பட்டது.

அந்த 20 நிமிட நேரத்தில் கிளேடன் கடும் வேதனையில் துடித்துள்ளார்.

மரணதண்டனை நிறுத்தப்பட்டபோதும் கிளேடன் மாரடைப்புக்குள்ளாகி மரணமடைந்தார்.

இந்நிலையில் அவரது மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு இரு மணித்தியாலங்களின் பின் மரணதண்டணை நிறைவேற்றப்பட்டிருந்த சார்ள்ஸ் வாரனரின் (46வயது) மரணதண்டனை 14நாட்களால் பிற்போடப்பட்டது.

1999 ஆம் ஆண்டில் 19 வயது யுவதியொருவரை சுட்டுக் கொன்றமைக்காக லொர்கெட்டிற்றும் 1997ஆம் ஆண்டில் 11வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் வார்னருக்கும் மரணதண்டணை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுண்டெலி அளவான அரியவகை மான், 100 கிராம் நிறையுடன் ஸ்பெய்னில் பிறந்தது
Next post (PHOTOS) ஒரு ஆண், எத்தனை பெண்களையும் திருமணம் செய்ய அனுமதி; கென்யாவில் புதிய சட்டம்