தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மே தின பேரணி! (படங்கள்)

Read Time:2 Minute, 43 Second

pillyancol1-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மே தின வாகன ஊர்திப் பேரணி நேற்று மாலை மட்டக்களப்பில் இருந்து மண்முனை புதுப்பாலம் ஊடாக மகிழத்தீவை நோக்கிச் சென்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் பேரணி இடம்பெற்றது.

கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஏ. ஜோர்ஜ்பிள்ளை போன்றோர் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.

DSC00102
DSC00103
DSC00105
DSC00111
DSC00112
DSC00118

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மே தினக் கூட்டம்!

DSC06724
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் ஏற்பாடுசெய்த சர்வதேச மேதின நிகழ்வுகள் நேற்று கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மிக பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது.

தழிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் நகர அலுவலகத்திலிருந்து மேற்படி மேதின பேரணி ஆரம்பமாகி மண்முனை பாலத்தினுடாக கொக்கட்டிச்சோலை – மகிழடித்தீவுவரை சென்று அங்கு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது மிக பிரமாண்டமான வாகனப்பேரணியுடன் மக்களும் கலந்து கொண்டனர்.

DSC06712
இந் நிகழ்வின்போது,  கோட்டக்கல்வி பணிப்பாளர் பாலச்சந்திரனால் சிறப்புரையினை வழங்கினார். தொடர்ந்து, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் கொள்கைபரப்புச் செயலாளர் அசாத் மௌலானா ஆகியோரால் உரைகள் நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து மேதின விசேட உரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

இறுதியில் விவசாயிகள், உழைப்பாளிகள் மற்றும் ஆலய குருமார் பொன்றோர் தலைவர்.சி.சந்திரகாந்தனால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

DSC06714
DSC06715
DSC06726
DSC06728
DSC06729
DSC06730
DSC06731
DSC06748

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனந்திக்கு த. தே. கூ கட்டுப்பாடு
Next post பிரசவத்திற்குச் சென்ற, கர்ப்பிணிப் பெண்ணின் குடலை வெட்டிய வைத்தியர்கள்!