பெண் கருவை காப்பாற்ற, மாமியாரைக் கொன்ற இந்தியப் பெண் விடுதலை

Read Time:2 Minute, 10 Second

judge-001அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவழி அமெரிக்கப் பெண்ணான பல்ஜிந்தர் கவுர்(39) என்ற பெண் இரண்டாவது முறையாக கருத்தரித்தார்.

ஏற்கனவே, ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருந்த அவரது வயிற்றில் வளரும் இந்த குழந்தையும் பெண்தான், என்பதை அறிந்த அவரது மாமியார் கருவை கலைத்து விடும்படி வற்புறுத்தி வந்தார்.

இதனைத் தொடர்ந்து நடந்த மனப்போராட்டத்தின் விளைவாக தனது மாமியாரை கொன்றதாக குற்றம் சாட்டிய போலீசார் அவரை கடந்த 26-10-2012 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையின் உள்ளே மகளை பிரசவித்து, இந்த கொலை வழக்கை சந்தித்து வந்த பல்ஜிந்தர் கவுர், ‘எனது வயிற்றில் வளரும் பெண் குழந்தையை சாவில் இருந்து தடுக்கவே மாமியாரைக் கொன்றேன்’ என்று வாதாடினார்.

சுமார் ஒரு வார காலம் நடந்த இவ்வழக்கு விசாரணையின்போது அவரது குடும்பத்தினர் யாரும் கோர்ட்டுக்கு வந்து அவரை சந்திக்கவில்லை.

இவ்வழக்கின் தீர்ப்பு பற்றி ஒன்றரை நாளாக விவாதித்த நடுவர்கள், பெண் கருவின் உயிரை காப்பாற்ற நடைபெற்ற இந்த கொலையை தற்காப்பு நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது என்று முடிவு செய்தனர்.

இதனையடுத்து, கடந்த மாதம் 25-ம் தேதி அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட பல்ஜிந்தர் கவுர், பிறந்த வீட்டு தரப்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரச்சினைக்கு எல்லாம், சிம்பு தான் காரணம் -ஹன்சிகா அம்மா
Next post காமசூத்ரா 3டி பட புகழ் ஷெர்லின் சோப்ரா, தமிழில் நடிக்கும் “பேட் கேர்ள்”