நெருக்கடியில் களம் இறங்கும் பிரான்சு 2-வது சுற்றுக்கு தகுதி பெறுமா?- டோகாவுடன் நாளை பலப்பரீட்சை

Read Time:2 Minute, 29 Second

W.Football1.jpgஉலக கோப்பை கால்பந்தின் 15-வது நாளான நாளையுடன் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைகின்றன. `ஜி’ மற்றும் `எச்’ பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் நாளை நடக்கிறது. `ஜி’ பிரிவில் நள்ளி ரவு நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் பிரான்சு டோகா அணியை எதிர்கொள்கிறது. 1998-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற பிரான்சுதான் மோதி இரண்டு ஆட்டங்களையும் டிராதான் செய்துள்ளது. அந்த அணி ஒரு வெற்றியை கூட பெறமுடியாமல் சிக்கி திணறி வருகிறது. இரண்டு ஆட்டத்தையும் டிராவில் முடிந்ததன் மூலம் அந்த அணி 2 புள்ளிகளுடன் `ஜி’ பிரிவில் 3-வது இடத்தில் உள்ளது.

இதே பிரிவில் சுவிட்சர் லாந்து, தென் கொரியா தலா புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் பிரான்சுக்கு வாழ்வா சாவா போராட்டம் ஆகும். அந்த அணி கட்டாயமாக வெற்றி பெற்றால் மட்டுமே 2-வது சுற்றுக்கு முன்னேற முடியும். அதுவும் 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

ஏனெனில் தென் கொரியா- சுவிட்சர்லாந்து ஆட்டம் டிராவில் முடிந்தது. பிரான்சு ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றால் கோல்கள் வித்தியாசத்தில் தென் கொரியாவும், சுவிட் சர்லாந்தும் தானாகவே 2-வது சுற்றுக்கு முன்னேறி விடும். பிரான்சு வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

புதிதாக களம் இறங்கி உள்ள டோகா அணியுடன் மோதுவ தால் பிரான்சு அணிக்கு வெற்றி வாய்ப்புகள் எளிதாக இருக்கும். எனினும் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைய வேண்டும் என்பதால் பிரான்சு வீரர்கள் கடுமையாக போராட வேண்டியது இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது ஐவரி கோஸ்ட்
Next post கை செலவு பணத்துக்காக விபசாரத்தில் இந்திய டீன் ஏஜ் பெண்கள்: கனடாவில் நடக்கும் அவலம்