(PHOTOS) பிரிட்டனிலுள்ள பரபரப்பான வீதியில் நீர் சறுக்கல்
Read Time:1 Minute, 3 Second
பிரிட்டனிலுள்ள பரபரப்பான வீதியொன்றை நேற்று முன்தினம் பலர் நீரில் சறுக்கி விளையாடுவதற்குப் பயன்படுத்தினர்.
பிரிஸ்டல் நகரிலுள்ள, பார்க் ஸ்ரீட் எனும் இந்த வீதியை லூகே ஜெரம் எனும் கலைஞர் 300 அடி (90மீற்றர்) நீளமான வோட்டர் ஸ்லைட் ஆக மாற்றியிருந்தார்.
சலவைத் திரவங்கள் கலக்கப்பட்ட அதிகளவு நீர் அதில் வழிந்தோடியது. அதனால் வோட்டர் ஸ்லைட் போன்று அவ்வீதி காணப்பட்டது.
லொத்தர் சீட்டிழுப்பொன்றில் வெற்றி பெற்றவர்கள் இதில் சறுக்கி செல்வதற்கான அனுமதியைப் பெற்றனர்.
சிறுவர்கள் மாத்திரமல்லால் பெரும் எண்ணிக்கையான பெரியவர்கள்கூட ஆர்வமுடன் இதில் சறுக்கி மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating