விபத்தில் காயமடைந்து ஆம்புலன்ஸ் வரும்வரை, ரோட்டிலேயே கிடந்து டிக்சனரி படித்த இளம்பெண்

Read Time:2 Minute, 4 Second

003aசீனாவின் தலைநகர் பீஜிங்கில் வாங் டாபன் (வயது 18) என்ற இளம்பெண் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிரே வந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானார்.

இதைல் அவரது காலில் காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்தோடியது. காயம் சிறிதாக இருந்தாலும் அவரால் எழுந்திருக்க முடியவில்லை.

இருந்தாலும் அவர் பதட்டப்படவில்லை உடனடியாக தனது மொபைல் போனை எடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். ஆம்புலன்ஸ் வரும் வரை விபத்து நடந்த இடத்திலேயே படுத்து கொண்டே தான் கொண்டு வந்திருந்த டிக்சனரியை எடுத்து படிக்க தொடங்கினார். இதை சுற்றி உள்ளவர்களும் வேடிக்கைபார்க்க தொடங்கினர்.

போலீஸாரும், ஆம்புலன்சும் வந்து அந்த இடத்தில் இருந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘வாழ்க்கை காலம் மிகவும் சிறியது. அந்த வாழ்க்கையில் நேரத்தை வீணாக்காமல் கல்வி பயில வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றார்.

மேலும் வலி தெரியாமல் இருக்க மனதை வேறு பக்கம் திருப்ப தனக்கு கல்வி உதவியதாகவும் கூறினார். அவருடைய கல்வி ஆர்வத்தை பார்த்து போலீஸார் வியப்படைந்தனர்.

தற்போது அவர் கேப்பிடல் நார்மல் யுனிவர்சிட்டியில் படித்து வருகிறார். எதிர்காலத்தில் தான் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் சேர்ந்து படிக்க விரும்புவதாக கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவர்ச்சி காட்டுவது தொடர்பான விவாதம் : டிவி நிகழ்ச்சியில் கட்டிபுரண்டு சண்டைபோட்ட நடிகைகள்
Next post 5.4 அடி உயரத்தில் உலகின் மிகப்பெரிய பர்கர் தயாரித்து சாதனை