முதல் வாழ்க்கை டென்ஷன், 2வது கணவருடன் சந்தோஷம் : ஊர்வசி
மனோஜ் கே.ஜெயனுடன் வாழ்ந்த போது டென்ஷனாகவே வாழ்க்கை நடத்தினேன் என்று 2வது கணவருடன் வாழும் ஊர்வசி கூறினார்.
தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் ஊர்வசி. இவர் மல்லுவுட் நடிகர் மனோஜ் கே.ஜெயனை காதலித்து மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
ஊர்வசி – மனோஜ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பர் சிவபிரசாத்தை ஊர்வசி 2வது திருமணம் செய்து கொண்டார். தனது திருமணம் குறித்து ஊர்வசி கூறும்போது,
இப்போது சந்தோஷமாக வாழ்கிறேன். மனோஜ் கே. ஜெயனுடன் வாழ்ந்த போது எப்போதும் ஒருவித பதற்றம், டென்ஷனுடனே வாழ்ந்து வந்தேன். எனக்கு குழந்தை பிறந்த போது மனதளவில் 50 வயது முதியவள் போல் என் நிலை மாறி இருந்தது. அதில் இருந்து இப்போது மீண்டிருக்கிறேன் என்றார்.
சிவபிரசாத்தை 2வதாக மணந்த ஊர்வசி தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். அவர் கமலுடன் உத்தம வில்லன் படத்தில் ஜோடியாக நடிக்கிறார். இது அவரது 498வது படம்.
Average Rating