ஐரோப்பிய கண்காணிப்புக் குழுவினரை வெளியேற்ற சிறிலங்கா எதிர்ப்பு

Read Time:1 Minute, 18 Second

sl-flag.gifஇலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. புலிகள் மீது தடையை விதித்திருப்பதன் மூலம் ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்கள் நடுநிலையோடு செயற்பட மாட்டார்கள் என்பதால் அவர்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று புலிகள் வலியுறுத்தினர். கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நோர்வேத் தூதுவருடனான சந்திப்பின் போதும் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் இதனை வலியுறுத்தினார். ஆனால் புலிகளின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் இன்று வியாழக்கிழமை நிராகரித்திருப்பதாக அசோசியேட் பிறஸ் நிறுவன செய்தி தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கை செலவு பணத்துக்காக விபசாரத்தில் இந்திய டீன் ஏஜ் பெண்கள்: கனடாவில் நடக்கும் அவலம்
Next post கொழும்பில் தங்குமிடமொன்றின் உரிமையாளர் சுட்டுக் கொலை