தமிழ்செல்வனின் மனைவி பிரான்சுக்கு வந்ததில், வெளிநாட்டு புலிகள் வட்டாரங்கள் மகிழ்ச்சி.. -டி.பி.எஸ். ஜெயராஜ்

Read Time:18 Minute, 3 Second

LTTE.Spt-MRSதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வனின் மனைவியும் குழந்தைகளும் பிரான்சுக்கு வந்ததில் வெளிநாட்டு புலிகள் வட்டாரங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. -டி.பி.எஸ். ஜெயராஜ்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப்பையா  பரமு தமிழ்செல்வனின் குடும்பம் பிரான்சுக்கு வந்தது, உலகத் தமிழர் புலம்பெயர்; பகுதிகளில் உள்ள புலிகள் மற்றும் புலிகள் சார்பு வட்டாரங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்செல்வனின் மனைவி சசிரேகா தனது மகள் அலைமகள் மற்றும் மகன் ஒளிவேந்தன் சகிதம் 24 எப்ரல் 2014ல் பிரான்சுக்கு வந்து சேர்ந்துள்ளார்.

இந்தக் குடும்பம் இந்தியாவிலிருந்து தென் கிழக்கு நாடொன்றுக்குச் சென்று அங்கிருந்து பிரான்சை வந்தடைந்;துள்ளதாக அறியப்படுகிறது. இது வரை புலிகள் வட்டாரங்கள் இவரது வருகையை பகிரங்கப் படுத்தாமல் அமைதி காத்த போதிலும், எப்படியாயினும் புலம்பெயர் பகுதிகளில் உள்ள முன்னணி எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்கள் இந்த முன்னேற்றங்களினால் மிகவும் உற்சாகமடைந்துள்ளார்கள்,

ஏனெனில் அந்தக் குடும்பத்தைக் காட்டி வெளிப்படையாக பிரச்சாரம் செய்து, வெளிநாடுகளில் இரகசியமாக பணம் திரட்டப் பயன்படுத்தலாம் என அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

ஸ்ரீலங்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் மே 2009ல் நடந்த நிகழ்வுகளை நினைவுகூருவதற்காக ஐரோப்பாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் திருமதி சசிரேகா தமிழ்ச்செல்வனை பகிரங்கமாக தோன்ற வைப்பதற்கான ஒரு ஏற்பாடும் உள்ளது.

sasirekha Thamilselvanஎனினும் அந்த குடும்பத்துக்கு நெருங்கிய உறவினரான ஒருவர், புலிகள் சார்பான மேடையில் தமிழ்செல்வனின் விதவை இந்தச் சமயத்தில் தோன்றுவதற்கான சாத்தியம் இல்லை என்றும் பிரான்சுக்கு இடம்பெயர அவர் முடிவு செய்தது, வெளிநாட்டில் ஒரு அமைதியான வாழ்க்கையை தொடரவும் மற்றும் அவரது குழந்தைகளை படிக்க வைப்பதற்குமே தவிர புலம்பெயர்;  அரசியலில் ஈடுபடுவதற்கல்ல என்று தெரிவித்தார்.

வெளிநாட்டில் அரசியல் பாத்திரம் ஒன்றில் பங்குபற்றும்படி திருமதி, சசிரேகா தமிழ்செல்வனின்மீது கணிசமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதை ஒப்புக்கொண்ட அந்த உறவினர், தான் இயல்பான வாழ்க்கையை தொடர விரும்புவதாகவும் மற்றும் அரசியல் பிச்சினைகளில் திரும்பவும் சிக்க விரும்பவில்லை எனக்கூறி திருமதி. தமிழ்செல்வன் அதை எதிர்த்து வருவதாகவம் அந்த உறவினா மேலும் தெரிவித்தார்.

சசிரேகா

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியை சேர்ந்த சசிரேகா தமிழ்செல்வனை திருமணம் செய்யும் வரை எல்.ரீ.ரீ.ஈயில் ஒரு அங்கத்தவராகவும் இருந்துள்ளார்;. எல்.ரீ.ரீ.ஈயில் அவரது இயக்கப்பெயர் இசைச்செல்வி என்பதாகும். அவரது மகளான அலைமகளுக்கு 14 வயதும் மகன் ஒளிவேந்தனுக்கு 10 வயதும் ஆகிறது.

எல்.ரீ.ரீ.ஈயில் தினேஷ் என்கிற இயக்கப்பெயரைக் கொண்ட தமிழ்செல்வன் 12 வருடங்களுக்கு மேலாக எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவு தலைவராக கடமையாற்றியுள்ளார்.

2001 முதல் 2005 வரையான காலத்தில் ஒஸ்லோவின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதான நடவடிக்கையின் போது அவர் பரந்தளவிலான சர்வதேச முக்கியத்துவத்தை பெற்றிருந்தார்.

புலிகளின் அரசியல் பொறுப்பாளர் 1967ல் மட்டுவிலில் பிறந்தவர், போரில் ஏற்பட்ட காயங்களினால் கைத்தடியின் உதவியுடனேயே நடந்து வந்தார். எந்த நேரத்திலும் முகத்தில் ஒரு நிரந்தர சிரிப்பை தக்க வைத்திருப்பது அவரது கவனிக்கத்தக்க திறமையாகும்.

எல்.ரீ.ரீ.ஈயின் உயர்மட்டத் தலைவரான பிரபாகரனால் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய திட்டத்தின்படி நடைபெற்ற முதல் திருமணம் தமிழ்செல்வன் – சசிரேகா  ஆகியோரின் திருமணமாகும்.

பிரபாகரனின் அந்த திட்டப்படி எல்.ரீ.ரீ.ஈயின்  பெண் அங்கத்தவர்களை பொருத்தமான ஜோடி  சேர்ப்பின் மூலம் ஆண் அங்கத்தவர்களுடன் இணை சேர்ப்பதாகும்.

நிச்சயிக்கப்படும் திருமணங்கள் தமிழ் சமூகத்தின் நடவடிக்கையின்  ஒரு பகுதியாக உள்ளதால் இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நடந்தேறின.

thamilselvanwife
பிரபாகரன்

சாதிப் பாகுபாடுகளை அழிப்பதற்கான திட்டமிட்ட முயற்சியாக பிரபாகரன் தானே ஒரு உயர்சாதிக் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை தமிழ்செல்வனின் ஜோடியாக தெரிவு செய்தார்.

யாழ்ப்பாணம் சுழிபுரத்தை சேர்ந்த சசிரேகாவின் குடும்பம் ஒரு காலத்தில் பம்பலப்பிட்டியில் ஏராளான வியாபார நிலையங்களை வைத்திருந்தது மற்றும் 1983 ஜூலை கலவரங்களின் பின் அவற்றை  விற்றுவிட்டது. அவரது தந்தை ஒரு ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்.

பிரபாகரன் மற்றும் அவரது மனைவி மதிவதனி ஆகியோர் தமிழ்செல்வனின் பெற்றோர்களாக பங்கெடுத்த அதேவேளை அன்ரன் பாலசிங்கம் அவரது மனைவி அடேல் ஆகியோர் மணமகளின் பெற்றோர்களாக பங்கெடுத்தனர்.

பிராமணச் சடங்குகள் திருமணத்தின் போது நடத்தப்பட்டன. கடைசி நிமிடம்வரை கனடாவில் இருந்த தமிழ்செல்வனின் தாய்க்கு இந்த திருமணம் பற்றி அறிவிக்கப் படவில்லை.

ஏன் தங்களுக்கு இதுபற்றி முன்கூட்டியே அறிவிக்கவில்லை எனத் தாய் மகனிடம் கேட்டதற்கு தமிழ்செல்வன் அளித்த பதில் “எனக்கே இது நான்கு நாட்களின் முன்புதான் தெரியவந்தது” என்பதாகும்.

பிரிகேடியர்

கிளிநொச்சி திருவையாறு பகுதியில், 2007 நவம்பர் 2ல் ஸ்ரீலங்கா வான்படை தமிழ்செல்வன் உறங்கிக் கொண்டிருந்த நிலத்தடி பதுங்கு குழியில் குண்டு வீசியதால் தமிழ்செல்வன் கொல்லப்பட்டார். இந்த மரணத்தால் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரன் பேரழிவை சந்தித்ததோடு, அது தனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு என பகிரங்கமாகவே தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ்செல்வன் மரணத்தின்பின் பிரபாகரனால்  பிரிகேடியர் தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டார். எல்.ரீ.ரீ.ஈயில் பிரிகேடியராக பதவி உயர்த்தப்பட்ட முதல் நபர்  தமிழ்செல்வன்.

தமிழ்செல்வனின் குழந்தைகளான அலைமகள் மற்றும் ஒளிவேந்தன் ஆகியோர் தங்களது தந்தையின் மரணத்தின்போது முறையே எட்டு மற்றும் நான்கு வயதுடையவர்களாக இருந்தார்கள்.

தமிழ்செல்வனின் மறைவுக்குப் பின்னரும் சசிரேகா தனது குழந்தைகளுடன் கிளிநொச்சியிலேயே வாழ்ந்து வந்தார். 2009 ஜனவரியில் கிளிநொச்சி வீழ்ச்சியடைந்த பின்னர் அவர்கள முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்தார்கள்.

மே 2009ல் முல்லைத்தீவில் ஏற்பட்ட இராணவத் தோல்விக்குப் பின்னர் சசிரேகாவும் அவரது பிள்ளைகளும் பொதுமக்கள் என்ற வகையில் இராணுவத்திடம் சரணடைந்தபோது,வவுனியாவில் எல்.ரீ.ரீ.ஈயின் குடும்பங்களுக்கான விசேட முகாமில் அடைக்கப்பட்டார்கள். பின்னர் அவர்கள் குடும்பம் பனாகொடவுக்கு நகர்த்தப்பட்டு முன்னாள் கிழக்குப் பிராந்திய தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கிற கேணல் கருணாவின் முயற்சியினால் இராணுவ முகாமுக்குள்ளேயே ஒரு சிறு குடிலில் தங்க வைக்கப்பட்டார்கள்.

பனாகொட

இரண்டரை வருடங்களை பாதுகாப்புக் காவல்களுடன் பனாகொட முகாமுக்குள் இருந்த சிறு குடிசைக்குள் கழித்த பின்னர்,நெருங்கிய உறவினர்களுடன் கண்காணிப்புடன் கூடிய தொடர்புகளை மேற்கொள்ள அந்த குடும்பத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முன்பாக அவர்கள் நெருங்கிய உறவினர்களை சந்திக்ககூடியதாக இருந்தது.

மே 2011ல் அந்த குடும்பத்துக்கு பாதுகாப்புக் காவலில் இருந்து சில நிபந்தனைகளுடன் கூடிய மட்டுப்படுத்தப்பட்ட விடுதலை கிடைத்தது, சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அமைய அந்த குடும்பம ஒரு  குறிபிட்ட இடத்தில் வசிக்கவேண்டும் என்கிற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.

சசிரேகா தெகிவளையில் உள்ள தனது பெற்றோர்களுடன் வசிப்பதை தெரிவு செய்தார். வெளிநாட்டில் வதியும் எல்லா உறவினருடனும் இல்லாவிட்டாலும் அநேகமான தனது உறவினர்களடனான தொடர்புபை அவர் துண்டித்துக் கொண்டார்.

தனது பிள்ளைகளை கொழும்பில் வைத்து படிப்பிப்பதற்கு கடினமாக இருப்பதை அறிந்த சசிரேகா தமிழ்செல்வன், தனது இரண்டு பிள்ளைகளுடன் தான் இந்தியாவிற்கு இடம்பெயர அனுமதிக்குமாறு ஸ்ரீலங்கா அதிகாரிகளின் சம்மதத்தை கோரினார்.

அவரது விடயத்தை கருணையோடு பரிசீலித்த ஸ்ரீலங்கா அதிகாரிகள் கட்டப்படுத்தப்பட்ட விடுதலை உத்தரவிலிருந்து அவரை முற்றாக விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்கள். அதன்பின் அவர் கிளிநொச்சி சென்று அங்குள்ள அரச அலுவலகங்களில் இருந்து பொருத்தமான ஆவணங்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்தியா

முறையான பயணப் பத்திரங்களுடன் சட்டபூர்வமாக அவர் கடந்த வருடம் இந்தியாவிற்குச் சென்றார். இந்தியாவிற்குச் செல்வதற்கு ஐக்கிய இராச்சியத்திலுள்ள அவரது ஒரு சகோதரர் நிதி உதவி செய்தார்.

இந்தியாவில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ பரப்புரையாளர்களான நெடுமாறன், வைகோ, சீமான், மற்றும் கொளத்தூர் மணி போன்றவர்கள் தங்களை கண்டுபிடித்து வெளிப்படுத்தி விடுவார்களோ என்கிற அச்சம் காரணமாக இந்தக் குடும்பம் தங்களைப் பற்றிய சுயவிபரங்களை அதிகம் வெளிக்காட்டாமலே நடந்து கொண்டார்கள்.

தனது பிள்ளைகளை இயல்பான நிலையில் வளர்ப்பதற்கு இந்தியாவின் சூழ்நிலை பொருத்தப்படாது என்பதைக் கண்ட சசிரேகா திரும்பவும் ஐரோப்பாவிற்கு இடம்பெயர தீர்மானித்தார்.

பிரித்தானியாவில் உள்ள சகோதரர் மற்றும் அத்தை ஆகியோரின் உதவியுடன் பிரான்சில் வசிக்கும் தமிழ்செல்வனின் தாயாரின் சகோதரியின் உதவியையும் பெற்று பிரான்சுக்கு பயணமாவதற்கான ஏற்பாடுகளை சசிரேகா மேற்கொண்டார். தனது தேடலில் வெற்றி பெற்ற சசிரேகா ஏப்ரல் 24ல் பிரான்சை வந்தடைந்தார்.

சசிரேகாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் மூலமாக நம்பத்தகுந்தபடி அறியமுடிவது, சசிரேகா பொதுவாக அரசியல் மற்றும் புலி சார்பு நடவடிக்கைகள் என்பனவற்றில் ஈடுபடாமல் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து தனது பிள்ளைகளை படிப்பிக்கவே விரும்புகிறாராம்.

எனினும் முக்கியமான எல்.ரீ.ரீ.ஈ பிரமுகர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம், அத்தகைய நடத்தைகள் ஐரோப்பாவில் நிரந்தர வதிவிடம் பெறுவதை பாதிக்கக்கூடும் என்று சுட்டிக் காட்டிய போதும் அவர்கள் அதை செய்து வருகிறார்கள்.

பயணம்

மேலும் அறியக்கூடியதாக உள்ளது, ஏற்கனவே பணம் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ள சில புலி செயற்பாட்டாளர்கள், அவரைப் பிரான்சுக்கு கொண்டுவந்த முகவர்களுக்கு தாங்கள் பணம் கொடுக்க வேண்டியுள்ளது என்று இரகசியமாகச் சொல்லி பணம் சேகரிக்கிறார்களாம்.

அவரது குடும்பம் கொழும்பிலிருந்து இந்தியாவுக்கு சுதந்திரமாக இடம்பெயருவதற்கு ஸ்ரீலங்கா அதிகாரிகள் அனுமதி அளித்துள்ள போதிலும்,அவரது வரவுக்கான சூழ்நிலை”ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிடியிலிருந்து” தப்பி வந்ததாக தவறாகச் சித்தரிக்கப்படுகிறது.

சசிரேகாவின் நெருங்கிய உறவினர் சொல்வதின்படி,பிரான்சில் நவம்பரில் இடம்பெறும் தமிழ்செல்வனின் மரணத்தின்  வருடாந்த நினைவு தின அஞ்சலி நிகழ்வுகளில் சிலவேளை சசிரேகா பங்கு பெறக்கூடும். தமிழ்செல்வனின் மார்பளவு உருவச்சிலை பிரான்சில் நிறுவப்பட்டு வருகிறது.

சசிரேகாஅரசியல் செயற்பாடுகளை தவிர்த்து தனது பிள்ளைகளை கல்வி கற்பிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று தீர்மானமாக  இருந்தாலும், புலம்பெயர்ந்தவர்களிடையே உள்ள புலிச் சக்திகள் அவரை அப்படி இருப்பதற்கு விட்டுவிடுமா? என்பது சந்தேகம்தான்.

இந்த வட்டாரங்களுக்கு சசிரேகாவின் வரவு பிரச்சாரத்தை புதுப்பித்து பணச் சேகரிப்பை அதிகரிக்க கடவுள் அனுப்பிய ஒரு வரவு என்றுதான் சொல்லவேண்டும்.

சீன பழமொழி

காற்று மரத்தை நிலையாக நிற்கவிடாது என்கிற சீன பழமொழியின்படி, புலம் பெயர்ந்தவர்களிடையே  உள்ள புலிகள் மற்றும் புலிகள் சார்பு சக்திகள் தமிழ்செல்வனின் விதவை சசிரேகாவை அரசியலில் இருந்து விலகியிருக்க விடுவதற்கான சாத்தியமில்லை..

திருமதி சசிரேகா மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளும் புலம்பெயர் தீவிரவாதிகளின் அழுத்தத்தை எதிர்த்து நின்று அமைதியும், சமாதானமும் மிக்க செழிப்பான வாழ்வை இந்த புதிய வாழ்விடத்தில் வாழவேண்டும் என்பதே இந்த எழுத்தாளனின் ஆர்வம் மிக்க நம்பிக்கை மற்றும் ஆசை ஆகும்.

(தேனீ மொழிபெயர்ப்பு:: எஸ்.குமார்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய்ப்பாலில் காபி போட்டு குடிக்கும், அமெரிக்க பெண்ணின் வீடியோ..
Next post உடல் வெப்பத்தால் சார்ஜ் ஆகும் செல்போன்..