கமல்ஹாசன் படத்துக்கு ம.பி.யில் 8ம் நூற்றாண்டு காட்சிகள்..

Read Time:1 Minute, 44 Second

ind.kamal-01கமல்ஹாசன் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தில் 8ம் நூற்றாண்டு காட்சிகள் மத்திய பிரதேசத்தில் படமாக்கப்படுகிறது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் உத்தம வில்லன்.

இதில் கமலுடன் பார்வதி, ஆண்ட்ரியா, பூஜா குமார், ஊர்வசி, ஜெயராம், நாசர், கே.பாலசந்தர், விஸ்வநாத், எம்.எஸ்.பாஸ்கர், விவேக் உள்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் 60 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது. இது குறித்து ரமேஷ் அரவிந்த் கூறியதாவது: 8ம் நூற்றாண்டு மற்றும் 21ம் நூற்றாண்டில் கதை நடப்பதுபோல் படமாக்கப்படுகிறது.

21ம் நூற்றாண்டுக்கான காட்சிகளை சென்னை மற்றும் பெங்களூரில் படமாக்கி முடித்துவிட்டேன். 8ம் நூற்றாண்டு காட்சிகள்தான் சவாலானவை.

அந்த காட்சிகளை மத்திய பிரதேசத்தில் உள்ள பழங்கால கட்டிடங்கள் நிறைந்த பகுதிகளிலும் புராதன சின்னங்கள் நிறைந்த பகுதிகளிலும் படமாக்கி வருகிறோம்.

கமல்ஹாசனுடன் ஏற்கனவே பணியாற்றி இருப்பதால் அவரது விருப்பங்கள் எனக்கு தெரியும். அதனால் எங்களுக்குள் நல்ல கெமஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகியுள்ளது. அது படத்தில் தெரியும். இவ்வாறு ரமேஷ் அரவிந்த் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுபோதையில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய, 10 பிள்ளைகளின் தந்தை ரயில் மோதி மரணம்..
Next post சுவிஸில் ஸ்பீட் கமெரா ரகசியங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட பெண்ணுக்கு சிக்கல்