கொழும்பில் தங்குமிடமொன்றின் உரிமையாளர் சுட்டுக் கொலை

Read Time:1 Minute, 51 Second

Slk-map.jpgகொழுப்பு பழைய சோனகத் தெருவிலுள்ள தங்குமிடமொன்றின் உரிமையாளர் நேற்றிரவு அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார். தங்மிடத்திற்குள் பிரவேசித்தவர்களே இவரைச் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரியவருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் சம்பு தங்குமிடமொன்றின் முகாமையாளரான வவுனியாவைச் சேர்ந்த 35வயதுடைய கே.தங்கேஸ்வரன் என்பவரே நேற்றிரவு 7.30மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வாழைத்தோட்ட காவல்துறையினர் தெரிவித்தனர். மேல் மாடியில் இருந்தபோது அங்கு பிரசன்னமானவர்கள் இவரின் தலைமீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு; விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்;டுக்கு இலக்கான முகாமையாளர் ஸ்தலத்திலேயே இறந்து விட்டதாகவும், இதுகுறித்து வாழைத்தோட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெயவருகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இரண்டுபேர் காவல்துறையினரால் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை சவச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஐரோப்பிய கண்காணிப்புக் குழுவினரை வெளியேற்ற சிறிலங்கா எதிர்ப்பு
Next post ஜப்பானை வீழ்த்தியது: பிரேசில் 2-வது சுற்றில் கானாவுடன் 27-ந்தேதி மோதுகிறது