மதம் மாறிய கர்ப்பிணிக்கு தூக்கு தண்டனை; சூடான் நீதிமன்றம் தீர்ப்பு

Read Time:2 Minute, 57 Second

judge-004சூடானில் திருமணத்துக்காக மதம் மாறிய இளம்பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சூடான் நாட்டை சேர்ந்தவர் மரியம் யாக்யா இப்ராகிம் (27). கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவரது தந்தை சிறு வயதிலேயே பிரிந்து சென்று விட்டார்.

தாயின் கவனிப்பில் வளர்ந்த மரியம் யாக்யா படித்து டாக்டரானார். கிறிஸ்தவ பெண்ணாக வளர்ந்தாலும், அவருடைய ஆவணங்களில் மரியம் முஸ்லிமாகவே காட்டப்பட்டு வந்துள்ளார்.

சூடான் நாட்டின் சட்டப்படி முஸ்லிம் பெண்கள் வேறு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்யவோ மதம் மாறவோ கூடாது.

இதற்கிடையில் மரியம் யாக்யா, கிறிஸ்தவரான டேனியல் வானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் அவர் மதம் மாறியதாகவும், மதம் மாறி ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் புகார் எழுந்தது. சூடான் போலீசார், மரியம் யாக்யாவை கைது செய்தனர். அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீண்டும் முஸ்லிம் மதத்துக்கு மாற அவகாசம் கொடுத்தனர். ஆனால், அவர் தான் கிறிஸ்தவராகவே வாழ விரும்புவதாக தெரிவித்தார்.

இதையடுத்து மீண்டும் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “அவகாசம் கொடுத்தும் மரியம் மீண்டும் முஸ்லிம் மதத்துக்கு திரும்பவில்லை. எனவே அவரது திருமணம் செல்லாது. மேலும், 100 சவுக்கடிகள் கொடுத்து, மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும்” என்று தீர்ப்பளித்தனர்.

மரியம் கர்ப்பமாக இருப்பதால் குழந்தை பிரசவிக்கும் வரை அவரது தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மரியத்துக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சர்வதேச பொது மன்னிப்பு கழகம் (அம்னஸ்டி இன்டர்நேஷனல்) வலியுறுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டு வயது மகளை நீச்சல் குளத்தில் தள்ளிய தந்தை கைது
Next post பிரேசில் சிறையில் 122 பார்வையாளர்களை சிறைபிடித்த கைதிகள்