இரண்டே காரில் முழுயூனிட்டை பேக் செய்த கேமராமேன்..

Read Time:1 Minute, 41 Second

002fஇரண்டே கார்களில் முழு யூனிட்டையும் பேக் செய்து ‘பூவரசம் பீப்பீ’ என்ற படத்தை முடித்து வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா.

இது பற்றி அவர் கூறியது:ஈரம், நண்பன், விண்ணை தாண்டி வருவாயா போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன்.

அந்த அனுபவத்தில் ‘பூவரசம் பீப்பீ’ என்ற படத்தை சுஜாதா செந்தில்நாதனுடன் இணைந்து தயாரிப்பதுடன் ஒளிப்பதிவு பொறுப்பையும் ஏற்றேன். ஹலிதா ஷமிம் டைரக்ஷன். வன்முறை சம்பவமொன்றை பார்க்கும் 3 சிறுவர்களின் மனநிலை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை.

கவுரவ் காளை, பிரவின் கிஷோர், வசந்த் ஆகிய 3 சிறுவர்களுடன் சமுத்திரக்கனி கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். சிறுவர்கள் பள்ளியில் படிப்பதால் அவர்களின் விடுமுறை நாட்களில் மட்டும் ஷூட்டிங் நடத்தினோம். தயாரிப்பு செலவை திட்டமிட்டு செய்தோம்.

2 கார்களில் முழு யூனிட்டும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஷூட்டிங் நடத்தி முடித்தோம். தேவையில்லாத செலவை குறைத்து படம் தயாரிப்பது எப்படி என்பதற்கு இப்படம் உதாரணமாக இருக்கும்.இவ்வாறு மனோஜ் பரமஹம்சா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) அனைத்தையும் போல காதலனையும் பகிர்ந்து கொண்ட இரட்டையர்கள்..
Next post 4 வயது சிறுமி மீது வல்லுறவு சந்தேக நபருக்கு விளக்கமறியல்