எதிரிகளால் வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்களே மீட்பு
Read Time:1 Minute, 7 Second
கிளிநொச்சி பளை கிழக்கு கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட விமான பாகங்கள் இராணுவத்திற்குச் சொந்தமான இல 614 எம்.ஐ 24 ஹெலிகொப்டர் உடையது என தெரியவந்துள்ளது.
விமானப்படை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
1997ம் ஆண்டு மார்ச் மாதம் குறித்த விமானம் காணாமல் போனதாகவும் எதிரிகளின் தாக்குதலால் விமானத்தில் இருந்தவர்களுடன் விமானம் வீழ்த்தப்பட்டதாகவும் புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.
விமான விபத்தை அடுத்து அதில் பயணித்த இருவரின் சடலம் இந்திய கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படடு இராணுவ மரியாதையும் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating