கடலில் மூழ்கிய கெமரா இரு வருடங்களின் பின்னர் மீட்பு : புகைப்படங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன..

Read Time:2 Minute, 6 Second

5626Thumபசுபிக் கடலில் இரு வருடங்களுக்கு முன்னர் கப்பலுடன் மூழ்கி காணாமல்போன கெமரா ஒன்று அண்மையில் மீட்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு வேன்கோவர் தீவில் மூழ்கிய கப்பலின் சிதைந்த பாகங்களிடையே இந்த கெமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆராய்ச்சிக்காக வான்கோவர் தீவில் கடலுக்கடியில் ஆராய்ச்சி மேற்கொண்ட இரு மாணவர்களே இதனைக் கண்டெடுத்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக மூழ்கிய கெமராவின் சேமிப்பகம் (மெமரி கார்ட்) தற்போதும் செயற்படுகின்றது. ‘சேமிப்பத்தை துப்பரவு செய்து தனது மடிக்கணினியில் பரிசோதித்தபோது அது பழுதடையாமல் இருப்பது தெரிந்தது’ எனக் கூறியுள்ளார் கிரே.

மெமரி கார்டிலிருந்த புகைப்படங்களை எடுத்த இணையத்தில் தரவேற்றி அதன் உரிமையாளரைக் கண்டுபிக்க ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவியான ஸியோபன் கிரே முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து 2012ஆம் ஆண்டு மூழ்கிய கப்பலில் காப்பாற்றபட்ட போல் பேர்கொய்ன் என்பவரே கண்டெடுக்கப்பட்ட கெமராவின் உரிமையாளர் எனத் தெரியவந்துள்ளது. இவர் கிரேயை தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு எமது முக்கியமான குடும்ப புகைப்படம் அதில் இருப்பதாகவும் கிடைக்காது என நினைத்த பொருள் கிடைத்த மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

பின்னர் கெமராவும் மெமரி கார்ட்டையும் இவ்வாரமே போலுக்கு கிரே அனுப்பி வைத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆவியை விரட்டுவதற்கு முயற்சித்ததில் பெண் பலி
Next post மகளை நரபலி கொடுக்க முயன்ற தந்தை கைது..