(PHOTOS) இளம் பெண்கள் மூவரின் துணிகர ‘டொப்லெஸ் சுற்றுலா’..
இளம் பெண்கள் மூவர் இணைந்து மேற்கொள்ளும் துணிகரமான ‘டொப்லெஸ் சுற்றுலா’ புதியதொரு அதிர்வலையை உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒலிவியா எடிகின்டொன் (20 வயது), லைடியா பக்லர் (21 வயது) மற்றும் நோர்வையைச் சேர்ந்த இங்வில்ட் மார்ஸ்டீன் (20 வயது) ஆகிய மூன்று பெண் பயணிகளே இந்த டொப்லெஸ் சுற்றுலாவை மேற்கொள்கின்றனர்.
டொப்லெஸ் சுற்றுலா என்பது உலகத்துக்கு இதயத்தையும் மார்பையும் திறப்பதாகும் என இப்பெண்கள் தமது சுற்றுலா திட்டம் குறித்து தெரிவிக்கின்றனர்.
இம்மூவரும் தாம் பயணம் செய்யும் இடங்களில் தங்களது மேலாடை இன்றி டொப்லெஸ்ஸாக படம் பிடித்து அவற்றினை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இவற்றில் இம்மூவரும் ஒருபோதும் தமது முன்னழகை காட்டவில்லை.
‘இச்செய்தி ஒவ்வொருவரையும் பெருமைப்படுத்துகிறது. தங்களது உடல் குறித்து வெட்கிக்கும் இளம் பெண்களுக்கு இது உற்சாகமாகவும் தமது உடலை விரும்பச் செய்வதாகவும் இது அமையும் என எமது பெற்றோர் நினைக்கின்றனர்’ என்கிறார்கள்.
இசை மற்றும் நடனம் கற்றும் இம்மாணவிகள் கிறீன்வீச்சில் ஒன்றாக வசிக்கின்றனர். டொப்லெஸ் சுற்றுலாவை 2012ஆம் ஆண்டு நோர்வேயில் ஆரம்பித்துள்ளனர். தற்போது இது மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
வௌ;வேறு இடங்களில் வித்தியாசமான உணர்வுகளுடன் படம்பிடித்துக்கொள்ளும் இப்பெண்களின் புகைப்படங்களை பல்லாயிரக் கணக்கானோர் விரும்புவதுடன் இணையத்தில் பின்தொடரவும் செய்துள்ளனர்.
‘தாங்கள் இதுவரையில் எந்தவொரு பாரிய அசம்பாவிதங்களையும் எதிர்நோக்கவில்லை’ எனக் கூறும் இத்துணிகர பெண்களின் செயற்பாட்டுக்கு நண்பர்கள் மற்றும் குடும்பம் ஆதரவாக இணைந்துகொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
இப்பெண்கள் மூவரும் எதிர்வரும் நாட்களில் இத்தாலி, கிரோஷியா, மற்றும் சுவீடன் உள்ளிட்ட நாடுகளுக்கு லொப்லெஸ் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர்.
Average Rating