(VIDEO) ஊர்வசி பாடலின், ஆங்கில் வடிவம் உலக அளவில் அதீத பிரபலம்..

Read Time:1 Minute, 50 Second

urvasiகாதலன் திரைப்படத்தில் ஏ.ஆர் ரகுமானின் இசையில் வெளிவந்து சக்கை போட்ட பாடல் தான் ஊர்வசி ஊர்வசி டேக் கிட் ஈஸி ஊர்வசி.

இப்பாடல் வெளிவந்தபோது யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் இயக்க புரட்சிப் பாடல்களே பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டு இருந்தன.

ஆனால் இச்சூழலிலும் ஊர்வசி ஊர்வசி டேக் கிட் ஈஸி ஊர்வசி பாடல் இளையோரின் வாய்களில் முணுமுணுக்கப்படுகின்ற அளவுக்கு பிரபலம் பெற்று விளங்கியது.

நாளடைவில் எத்தனையோ ஹிட் பாடல்கள் வர இப்பாடல் மறக்கப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் இப்பாடலை பற்றி பேச வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்குகின்ற வெள்ளைக்கார இளையோரால் நடத்தப்படுகின்ற இசைக் குழு ஒன்று இப்பாடலை ஆங்கிலத்தில் கொடுத்து உள்ளது.

இந்த ஆங்கிலப் பாடல் தற்போது உலக அளவில் அதீத பிரசித்தி பெற்று வருகின்றது. கடந்த 28 ஆம் திகதி இப்பாடல் யூ ரியூப்பில் பதிவேற்றப்பட்ட நிலையில் இப்போது வரை 1,312,619 பேர் பார்வையிட்டு உள்ளனர்.

ஊர்வசி ஊர்வசி தமிழ் பாடலை கடந்த 2007 செப்டெம்பர் 30 ஆம் திகதியில் இருந்து இப்போது வரை யூ ரியூப்பில் பார்வையிட்டு இருப்போரின் எண்ணிக்கை 822173.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நரேந்திரமோடியின் முதல் வெளிநாட்டு விஜயம் இலங்கை
Next post இஸ்லாமியத்தை தழுவிய மற்றுமொரு பிரபலம்!