தனியாக டொப்லெஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, ஹொலிவூட் நடிகர் புறூஸ் வில்லிஸின் மகள்

Read Time:2 Minute, 15 Second

56513இன்ஸ்டாகிராம் இணையத்தளத்தின் நிர்வாண புகைப்பட கொள்கைக்கு எதிராக ஹொலிவூட்டின் புகழ்பெற்ற நடிகர் புறூஸ் வில்லிஸ் மற்றும் நடிகை டொமி மூரின் மகள் தனியாக டொப்லெஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

புகைப்படங்கள் தரவேற்றம் செய்யும் இன்ஸ்டாகிராம் இணையத்தளத்தில் நிர்வாண புகைப்படங்களை தரவேற்றம் செய்ய முடியாது. இக்கொள்கையை எதிர்த்து டொப்லெஸ்ஸாக ஆர்ப்பாட்டம் செய்து கவனத்தை ஈர்த்துள்ளார் 22 வயதான ஸ்கௌட் வில்லிஸ்.

நியூயோர்க்கிலுள்ள வீதியோரமாக பாவாடை, காலணி மற்றும் கைப்பை அணிந்து மேலாடை எதுவுமின்றி டொப்லெஸ்ஸாக நடந்து சென்று கடையொன்றில் பூங்கொத்து வாங்கியுள்ளார். இதனை புகைப்படமெடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நியூயோர்க் நகரில் நிர்வாணம் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்ஸ்டாகிராமில் அனுமதிக்கப்படவில்லை’ என இன்ஸ்டாகிராமின் நிர்வாண கொள்கை குறித்து தனது ஆத்திரங்களையும் வெளியிட்டுள்ளார்.

‘தனது டொப்லெஸ் படத்தினை வெளியிட்ட பின்னர் நீங்கள் பார்ப்பதை விரும்பாவிட்டால் என்னை பின்தொடர வேண்டாம்’ எனவும் கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராமின் பெண்கள் நிர்வாண கொள்கையினால் மார்பக புற்றுநோய் குறித்து புகைப்படங்களையும் தரவேற்றம் செய்ய முடியாமை தொடர்பிலும் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார் ஸ்கௌட் வில்லிஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராஜகிரியவில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு
Next post கவர்ச்சியெல்லாம் நடிப்புக்கு மட்டுமே..