செல்போன் திருடிய 2 பேரின் கைகளை வெட்டிய போலீசார்: 5 பேர் அதிரடி சஸ்பெண்ட்

Read Time:2 Minute, 45 Second

knifeபாகிஸ்தானில் செல்போன் திருட்டு வழக்கில் சிக்கிய 2 பேரின் கைகளை போலீசார் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் வெகாரி மாவட்டத்தில் காகூ மண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குலாம் முஸ்தபா (30), லியாகத் அலி (28). இந்த கிராமம் லாகூரில் இருந்து சுமார் 340 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கடந்த வாரம் இப்பகுதியில் உள்ள கடைகளில் செல்போன் மற்றும் எலக்ட்ரிக் வயர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயின.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி முஸ்தபா, லியாகத் அலி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரையும் பகவல்பூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு வந்தனர். முஸ்தபா, லியாகத் அலி ஆகிய 2 பேரின் வலது கைளும் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டனர்.

அவர்கள் இரண்டு பேரும் போலீஸ் கஸ்டடியின் போது தற்கொலைக்கு முயன்ற போது கையை வெட்டிக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘இரண்டு பேரின் கைகளும் வெட்டப்பட்டு சுமார் 10 மணி நேரத்திற்கு பிறகே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மிகுந்த சிரமத்திற்கு பிறகு சிகிச்சை அளித்து கைகளை ஒட்ட வைத்தோம். தற்கொலைக்கு முயன்றிருந்தால் உடனே ஏன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வரவில்லை’ என்று சந்தேகம் எழுப்பினர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த இரண்டு பேரின் வலது ¬களை போலீசார் வெட்டியது தெரிய வந்தது. இதனையடுத்து 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த 17 வயது வாலிபர் கைது
Next post ‘இராணுவத்தை வெளியேற்றி, வடக்கில் மீண்டும் புலிகளை உருவாக்கவே விக்னேஸ்வரன் முயற்சி’