பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியை, நக்கலடித்த நீதிபதி சஸ்பெண்ட..

Read Time:2 Minute, 32 Second

002kஅமெரிக்காவின் மான்டானா மாநிலத்தில் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியை நக்கலடித்த நீதிபதிக்கு கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட் அவரை ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

அமெரிக்காவின் மான்டானா மாகாணத்தில் உள்ள பில்லிங்ஸ் நகர பள்ளியில் கடந்த ஆண்டு படித்து வந்த 14 வயது சிறுமி செரிஸ். இந்த பள்ளி ஆசிரியராக இருந்த ஸ்டாசி டீன் ராம்போல்ட் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுதொடர்பான வழக்கு பில்லிங்ஸ் மாவட்ட நீதிபதி ஜி.டோட் பாக்கின் முன் விசாரணைக்கு வந்தது.வழக்கு விசாரணையின் போது, சிறுமி பற்றி நீதிபதி டோட் தெரிவித்த கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறுமியை பார்த்தால் சின்னபெண் போல தெரியவில்லை என்று டோட் நக்கலாக கூறியுள்ளார்.

மேலும் ஆசிரியர் ராம்போல்டுக்கு வெறும் 30 நாள் சிறை தண்டனையை அவர் வழங்கினார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டாள். கொதித்து போன குடும்பத்தினர், மான்டானாவில உள்ள சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நீதிபதி டோட் பாக் தனது தவறான நடவடிக்கை மூலம் நீதிமன்றம் மீதான மக்களின் நம்பிக்கையை அழித்து விட்டார் என்று கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும், சிறுமி பலாத்காரம் தொடர்பான வழக்கு விசாரணை வேறொரு நீதிபதியின் கீழ் நடைபெறும் என்றும், சர்ச்சைக்குரிய நீதிபதி 31 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் சுப்ரீம் கோர்ட் கூறியது. நீதிபதி டோட் ஜூலை 1ம் தேதி கோர்ட்டில் ஆஜராகவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மஹிந்த-மோடி சரியான ஜோடி அது ஜாடிக்கேற்ற மூடி: சபையில் அஸ்வர்
Next post அமெரிக்க இராணுவ வீரர் தொடர்பில் சர்ச்சை..