By 6 June 2014 0 Comments

“டச்” விட்டுப் போனதால் தடுமாற்றம்: அமலாபால் படத்தில் கஸ்தூரி நீக்கம்..

002mஅமலாபால் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன கஸ்தூரி திடீரென்று நீக்கப்பட்டார். டைரக்டர் விஜய், அமலா பால் திருமணம் வரும் 12ம் தேதி நடக்கிறது.

முன்னதாக அமலாபால் மலையாளத்தில் மிலி என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். அதன் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது.

இப்படத்தில் குணசித்திர கதாபாத்திரம் ஒன்றுக்கு கஸ்தூரி தேர்வு செய்யப்பட்டார். படத்தில் அமலாவுக்கு அம்மா வேடம் ஏற்க இருந்தார்.

10 வருட இடைவெளிக்கு பிறகு அவர் இப்படம் மூலம் முழு நீள கேரக்டரில் நடிக்கிறார். அதனால் இதுவே அவரது ரீ என்ட்ரி படமாக கருதப்பட்டது.

ஆனால் அவருக்கு நடிப்பில் இடைவெளிவிட்டதால் காட்சிகளில் இயக்குனரின் விருப்பத்தை திருப்தி செய்ய முடியாத நிலை உள்ளதாக பட யூனிட்டில் தெரிவித்தனர். மருத்துவமனை காட்சி ஒன்றில் உருக்கமாக நடிக்க இயக்குனர் சொன்னார்.

ஆனால் வசன உச்சரிப்பில் தெளிவு இல்லாமல் தடுமாறியதுடன் உணர்ச்சிகளையும் சரியான விதத்தில் வெளிப்படுத்த முடியாமல் திணறினார். ஒரேயொரு காட்சியை எடுத்து முடிக்க 25 டேக் ஆனதுடன் 3 நாள் இதற்கான ஷூட்டிங் நடந்தது.

இது பட குழுவினருக்கு திருப்தி அளிக்கவில்லை. 10 வருடம் நடிப்பில் டச் விட்டுப்போனதால் இயக்குனரின் எதிர்பார்ப்பை ஈடுசெய்ய முடியவில்லை என்பதை கஸ்தூரியும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து குறிப்பிட்ட கேரக்டரிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக பிரவினா நடிக்கிறார் என்றனர்.



Post a Comment

Protected by WP Anti Spam