17 வயது யுவதியை திருமணம் செய்கிறார் சொஹைப் அக்தர்

Read Time:1 Minute, 31 Second

5718_newsthumb_akthar300பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சொஹைப் அக்தர் 17 வயதான யுவதியை திருமணம் செய்யப்போவதாக பாகிஸ்தான் பத்தரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என வர்ணிக்கப்பட்ட அதிவேக பந்துவீச்சாளரான 39 வயதான சொஹைப் அக்தர் ஜூன் 12 ஆம் திகதி தனது சொந்த ஊரான ராவல்பிண்டிக்கு செல்லவுள்ளதாகவும் ஜூன் 3 ஆம் வாரத்தில் திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

ருபாப் எனும் பெயருடைய 17 வயதான இந்த யுவதிக்கு கிரிக்கெட்டில் அவ்வளவு ஈடுபாடு இல்லை எனவும் அவருக்கு 3 மூத்த சகோதரர்களும் தங்கையொருவரும் இருப்பதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆனால், தான் 17 வயதான பெண்ணை திருமணம் செய்வதற்கான திட்டம் எதுவுமில்லை என சொஹைப் அக்தர் தெரிவித்துள்ளார். ‘என்னை மதிக்காவிட்டாலும் அந்த யுவதிக்காவது மதிப்பளியுங்கள்’ என டுவிட்டரில் அக்தர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதி: ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட எய்ட்ஸ் தொற்றுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு
Next post மோடி உடை அணியும் பாணிக்கு, அமெரிக்க ஊடகங்கள் புகழாரம்