மோடி உடை அணியும் பாணிக்கு, அமெரிக்க ஊடகங்கள் புகழாரம்

Read Time:2 Minute, 29 Second

7a6c489c-5fbd-44bb-a28e-e7112378fbfb_S_secvpfஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உடை அணியும் பாணிக்கு அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த மோடி, ஒவ்வொரு மேடையிலும் விதவிதமான வண்ணங்களில் தைக்கப்பட்ட பைஜாமாக்களையும், அரைக் கை மற்றும் முழுக்கை குர்தாக்களையும் அணிந்து புதுப் பொலிவுடன் காணப்பட்டார்.

பாராளுமன்ற தேர்தலில் வென்று பிரதமரான பின்னர், உடைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டி வரும் மோடி, ஒரே நாளில் இரு வேறு உடைகளிலும் தோன்றி கலக்கி வருகிறார்.

அவரது இந்த உடை தேர்வையும், அவர் அணியும் உடைகளின் பாணியயும் அமெரிக்காவின் பிரபல நாளிதழ்களான நியூயார்க் போஸ்ட், வாஷிங்டன் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளும், இதர ஊடகங்களும் பாராட்டி, புகழாரம் சூட்டியுள்ளன.

‘பிராங்கோயிஸ் ஹாலண்டே, நெல்சன் மண்டேலா பாணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உடை அணியும் பாணியும் ஆராய்ச்சிக்கு உரிய ஒன்றாக உள்ளது’ என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

‘ஓரமாக விலகுங்கள் மிச்சேல் ஒபாமா…, இந்த உலகத்துக்கு ஒரு நாகரிக அடையாளம் கிடைத்துள்ளது. அது, ‘சிக்’ என்று காட்சி அளிக்கும் விளாடிமிர் புதின் அல்ல.. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிதான் அது. இந்திய ஆடை அணியும் பாணியில் அடுத்த பெரிய கட்டமாக மோடி தோன்றுகிறார்.

குட்டையான ‘மோடி குர்தா’வில் அவரது தனிப்பட்ட பாணி கொண்டாட்டத்துக்கு உரிய ஒன்றாக மாறி வருகிறது’ என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழும் புகழ்ந்து தள்ளியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 17 வயது யுவதியை திருமணம் செய்கிறார் சொஹைப் அக்தர்
Next post பழைய காருக்கு மொடலான செக்ஸ் பொம்மை; ஈபே இணையத்தளத்தில் கவனத்தை ஈர்த்தது