பழைய காருக்கு மொடலான செக்ஸ் பொம்மை; ஈபே இணையத்தளத்தில் கவனத்தை ஈர்த்தது

Read Time:2 Minute, 3 Second

5720ad_136601393பழைய வோக்ஸ்வேகன் கார் ஒன்றினை விற்பனை செய்வதற்காக பிரித்தானிய நபரொருவர் செக்ஸ் பொம்மையை பயன்படுத்தி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அங்கஸ் டீன் என்ற 47 வயதான நபரொருவர் ஈபே இணையத்தளத்தில் கார் வாங்குபவர்களின் கவனத்தை ஈர்க்கவே கார் மொடலாக செக்ஸ் பொம்மையைப் பயன்படுத்தியுள்ளார்.

சாண்டி எனப்பெயரிடப்பட்டுள்ள குறித்த செக்ஸ் பொம்மையே 1990ஆம் ஆண்டு வோக்ஸ்வேகன் கோல்ப் காருக்கு மொடலாக மாறியுள்ளது. பெயர் வெளியிடப்படாத அங்கஸின் நண்பர் ஒருவரே இந்த யோசனையை வழங்கியதுடன் தனது செக்ஸ் பொம்மையும் தொழில்சார் விடயத்துக்காக இரவல் கொடுத்து உதவியுள்ளார்.

சில திருத்த வேலைகள் செய்து பயன்படுத்தத்தக்க இக்காரினை விற்க மொடல்களை அணுகியபோது பலரும் விரும்பவில்லையாம். இதனையடுத்தே சாண்டியை தான் பயன்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார் அங்கஸ்.

தற்போது இணையத்தில் இவ்விளம்பரம் குறித்து தகவல் பரவலடைந்துள்ள நிலையில் நிச்சயமாக தனது காரினை விற்பனை செய்ய சாண்டி உதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அங்கஸ்.

முதல் முறை ஈபேயில் விற்பனைக்கு விடப்பட்டபோது நபரொருவர் வாங்குவதற்கு முன்வந்து பின்னர் பணம் செலுத்தாமல் விட்டுள்ளார். இதனையடுத்து தற்போது 2ஆவது முறையாக ஈபேயில் ஏலத்தில் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோடி உடை அணியும் பாணிக்கு, அமெரிக்க ஊடகங்கள் புகழாரம்
Next post முன்னாள் புலி உறுப்பினர் தப்பியோட்டம்..