புலிகள் மறைத்து வைத்திருக்கும் வெடிப்பொருட்கள் அன்டனிக்கு தெரியும்: பொலிஸ்

Read Time:3 Minute, 55 Second

ltte.logoதமிழீழ விடுதலை புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்கள் தொடர்பில் தகவலறிந்த ஜுட் அன்டனி என்ற இளங்கோ என்பவர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதால் குறித்த நபர் தொடர்பாக தகவலறிந்தவர்கள் பொலிஸாருக்கு அறிய தருமாறு தயவுடன் வேண்டப்படுகின்றனர்.

மேலும் அது தொடர்பில் மடு பிரதேசத்தை சேர்ந்த நந்தராஜா சௌந்தரநாயகம் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் டி.என்.டி ரக 15 கிலோ கிராம் நிறையுடைய வெடி பொருட்களையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அளித்த வாக்கு மூலத்திற்கு அமைவாகவே இளங்கோ குறித்த தகவல் கிடைக்கப் பெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த நான்காம் திகதி மடுப்பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட விஷேட தேடுதலுக்கு அமைவாக இருவரை கைது செய்ய முயன்ற போது மடு பிரதேசத்தை சேர்ந்த நந்தராஜா சௌந்தரநாயகம் கைது செய்யப்பட்டதுடன் ஒருவர் தப்பிச் சென்றார். அத்தோடு கைது செய்யப்பட்ட சௌந்தர நாயகத்துடன் 15 கிலோகிராம் நிறையுள்ள வெடி பொருட்கள் மீட்கப்பட்டன.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நந்தராஜா சௌந்தரநாயகத்திடம் பயங்கரவாத விசாரணை பிரிவு மேற்கொண்ட விசாரணையின் போது தன்னிடம் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தப்பிச் சென்றவரிடமும் இருப்பதாகவும் குறித்த நபர் தமிழீழ விடுதலை புலிகளால் கண்ணி வெடி உள்ளிட்ட வெடிபொருள்கள் மறைத்து வைக்கப்பட்ட பாதுகாப்பு பிரதேசம் தொடர்பில் நன்கு அறிவதாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார்.

இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்பு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் வெடிபொருள் தொடர்பில் பொறுப்பாளராக இருந்த ஜுட் அன்டனி என்ற இளங்கோ என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே ஜுட் அன்டனி என்ற இளங்கோவினால் விடுதலை புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட வெடிபொருள்கள் சில மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றது. ஆகவே குறித்த நபரினால் விமான நிலையத்தினை தாண்டி தப்பிச் செல்ல முடியாதளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 861634132 V என்ற அடையாள அட்டை இலக்கத்தினையும் N 0851289 என்ற இலக்க கடவுச்சீட்டினையும் உடைய குறித்த நபர் 1986 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 11 ஆம் திகதி பிறந்துள்ளார்.

ஜுட் அன்டனி என்ற இளங்கோ தொடர்பாக தகவலறிந்தவர்கள் 011 2451634 என்ற தொலைபேசியூடாக அறிய தருமாறு வேண்டப்படுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் சிகரெட் பிடிக்கும் 3 வயது சிறுவன்
Next post சென்சாரால் தடை செய்யப்பட்ட சன்னிலியோன் வீடியோ யூ டியூபில் கசிந்தது எப்படி? அதிர்ச்சி தகவல் (வீடியோ)