இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கிய படகில் இருந்து 73 பேரை கடற்படை மீட்டது.

Read Time:1 Minute, 16 Second

Indonesia.Map.jpgஇந்தோனேஷியாவில் சுமத்ரா தீவு அருகே உள்ள கடலில் சிபோல்கா துறைமுககத்தில் இருந்து ஒரு படகு புறப்பட்டது. அதில் 108 பயணிகளும், 12 சிப்பந்திகளும் இருந்தனர். நியாஸ் தீவு அருகே படகு சென்றபோது புயலில் சிக்கி அது கவிழ்ந்தது. இதில் இருந்த பயணிகள் கடலில் விழுந்தனர். அந்த வழியாக வந்த கடற்படை கப்பல் தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டது. கிட்டத்தட்ட 73 பேர் மீட்கப்பட்டனர். 47 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை. இந்தோனேஷியாவில் 17 ஆயிரம் தீவுகள் உள்ளன. எனவே அவற்றுக்கு இடையே போக்குவரத்துக்கு படகுகள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அந்த படகுகளில் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்படுவதும், அதனால் விபத்துகள் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதற்கிடையே மழை வெள்ளத்துக்கும், நிலச்சரிவுக்கும் பலியானவர்கள் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துவிட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இத்தாலி, கானா 2-வது சுற்றுக்கு தகுதி செக் குடியரசு, அமெரிக்கா வெளியேறியது
Next post நார்வே நாட்டில் பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவிகள் முக்காடு போட்டு வருவதற்கு தடை