பேய் படத்தில் நயன்தாரா

Read Time:1 Minute, 54 Second

9f58ef04-a29f-49d9-9323-1d7a4d3a7879_S_secvpfபேய் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஏற்கனவே கதாநாயகியை முக்கிய கேரக்டராக வைத்து தயாரான பல படங்களில் நயன்தாரா நடித்துள்ளார். தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக வந்தார். இப்படம் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

தெலுங்கில் ‘அனாமிகா’ பெயரிலும், தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற படத்திலும் நடித்தார். இதுவும் கதாநாயகியை முக்கியமாக வைத்து பின்னப்பட்ட கதை. இந்தியில் வித்யாபாலன் நடித்து பரபரப்பாக ஓடிய ‘கஹானி’ படத்தின் ரீமேக் இதுவாகும்.

தற்போது இந்த வரிசையில் பேய் படமும் அமைந்துள்ளது. இதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. பயமுறுத்தும் வகையில் தயாராகும் இந்த பேய் படத்தில் நயன்தாரா தெய்வீக சக்தி கொண்ட பெண்ணாக வருகிறார். நயன்தாரா நடிக்கும் முதல் பேய் படம் இதுவாகும். எனவே இதில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். இதில் நயன்தாராவுடன் நெடுஞ்சாலை படத்தில் நாயகனாக நடித்த ஆரி முக்கிய கேரக்டரில் வருகிறார். புது டைரக்டர் அஸ்வின் இயக்குகிறார்.

ஏற்கனவே ‘இது நம்ம ஆளு’, ‘நண்பேன்டா’, ‘தனி ஒருவன்’ படங்களில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் படமொன்றில் சூர்யா ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்தரபிரதேசத்தில் இளம் பெண் சுட்டுக்கொலை
Next post நல்லதண்ணியில் 4 வயது சிறுமி துஷ்பிரயோகம்; 17 வயது சிறுவன் கைது