நுவரெலியாவில் கடும் காற்று: மரம் முறிந்து விழுந்து மூவர் காயம்

Read Time:1 Minute, 21 Second

2967740861நுவரெலியா மாவட்டத்தின் அநேகமான பகுதிகளில் கடும் காற்று வீசுவதாக மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற மற்றும் உயரமான மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் டி.பி.ஜி.குமாரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று (18.06.2014) மாலை மஸ்கெலியா லக்ஸபான வாழைமலை தோட்டத்தில் மரத்திற்கு கீழ் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது, மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் காயமடைந்துள்ளனர்.

பின்னர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு பெரும் பாதிப்பு இல்லையென வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிலியின் வெற்றிக்கு ஆபாச நடிகை, 12 மணி நேரம் விடாமல் செய்த வித்தியாசமான சாதனை
Next post இந்திய மீனவர்கள் 24 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது