டாய்லட் பேப்பரில் திருமண ஆடை
Read Time:1 Minute, 14 Second
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் 20 ரோல் டாய்லட் பேப்பர்களை பயன்படுத்தி பூ வேலைப்பாடு நிறைந்த கண்ணைக் கவரும் திருமண ஆடை எல்லோர் மனதையும் கவர்ந்திருந்தது.
இந்த ஆடையை வடிவமைத்த மெக்சிகோ நகரை சேர்ந்த சூசன் ப்ரென்னான் (28 வயது) என்பவர் முதல் பரிசுத் தொகையான 10 ஆயிரம் டொலர்களை தட்டிச் சென்றார்.
இந்த போட்டியில் 1500 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்ததுடன், இறுதிச் சுற்றுக்கு 10 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
திருமண ஆடை மட்டுமின்றி, மணமகள் ஏந்திச் செல்லும் கூடை, கைப்பை ஆகியவற்றையும் அவர் டாய்லெட் பேப்பரை பயன்படுத்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த போட்டியில் இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் பரிசை வென்றுள்ளார்.
Average Rating