பொதுபலசேனா, ஞானசார தேரருக்கு ஆப்பு வைத்த பேஸ்புக்

Read Time:1 Minute, 42 Second

pikku.Pothubala_CIபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இருந்து பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரா தேரர் மற்றும் அந்த அமைப்பின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக் சமூக வலைத்தளமே பொதுபல சேனா மற்றும் அதன் செயலாளரின் பிரதான பிரச்சார இயந்திரமாக இருந்து வந்துள்ளது.

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் பல வாசகர்கள், மேற்படி அமைப்பு மற்றும் அதன் செயலாளரின் கணக்குகளில் வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் உரைகள் வெளியிடப்படுவதாக செய்த முறைப்பாட்டை அடுத்து, அந்த இரண்டு கணக்குகளையும் நீக்க பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் மத ரீதியான அடிப்படைவாத அமைப்புகளுக்கு ஆதரவாக பல பெயர்களில் பேஸ்புக் வலைத்தளத்தில் கணக்குகள் உருவாக்கப்பட்டு பதிவேற்றப்பட்டு வருகின்றன.

இதனை தவிர மேலும் பல கணக்குகளின் முன் பக்கங்களை பேஸ்புக் தடைசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பொதுபல சேனா போன்ற ஏனைய மதங்கள் மற்றும் இனங்களுக்கு எதிரான கருத்துக்களையும் உரைகளை வெளியிட்டு வரும் பல முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளின் பேஸ்புக் கணக்குகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டாய்லட் பேப்பரில் திருமண ஆடை
Next post மகனின் இறுதிக் கிரியைகளை ஸ்கைப்பில் பார்த்த பெற்றோர்!