தல… தலதான்- அஜீத்துக்கு திரிஷா பாராட்டு

Read Time:1 Minute, 42 Second

487c5515-989c-444b-8242-0eb64e41a170_S_secvpfஅஜீத்தும் திரிஷாவும் ஏற்கனவே ‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ படங்களில் இணைந்து நடித்தனர். தற்போது கவுதம் மேனன் இயக்கும் படத்திலும் சேர்ந்து நடிக்கிறார்கள். இதில் இன்னொரு கதாநாயகியாக அனுஷ்காவும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படுகிறது.

இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆயிரம் தோட்டாக்கள் என்ற தலைப்பை பரிசீலிப்பதாக பேசப்பட்டது. ஆனாலும் அது உறுதியான தகவல் இல்லை. அஜீத் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அஜீத்துடன் மீண்டும் நடிப்பது திரிஷாவுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திரிஷா கூறும் போது அஜீத்துடன் நான் நடிக்கும் நான்காவது படம் இதுவாகும். எனது திறமை பற்றி அவர் ஏற்கனவே அறிந்து இருந்தால் இந்த படத்தில் அழுத்தமான கேரக்டரில் என்னை நடிக்க வைத்துள்ளார். தல தலதான் என்றார்.

திரிஷா ‘பூலோகம்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக; இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை
Next post சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய, பிரான்ஸ் பிரஜை கைது