By 22 June 2014 0 Comments

கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது; அதிர்ச்சியில் படக்குழு

006hஇளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாவுள்ள கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்து ரசிகர்கள் இருந்தனர்.

படக்குழுவும் இன்று கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்றைய தினம் வெளியாகியுள்ளன.

அதிர்ச்சியடைந்த படக்குழு மேலும் சில போஸ்டர்களை நேற்றிரவு முதல் வெளியிடத் தொடங்கிவிட்டனர். இதன் முதற் கட்டமாக பேஸ்புக்கில் உள்ள விஜய்யின் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘கத்தி’. துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய்யும், முருகதாஸும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் அதிகரித்துள்ளது.

விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத்தின் இசை விசேடமாக இருக்கும் என்கிறார்கள்.

மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக அனிருத் விசேட இசையை உருவாக்கியுள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிஜிட்டலிலும் வெளியாகியுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam