‘வித் யூ வித்அவுட் யூ’ என்ற இலங்கைத் திரைப்படம் தமிழகத்தில் ரத்து

Read Time:1 Minute, 41 Second

news-009வித் யூ வித்அவுட் யூ’ என்ற இலங்கை திரைப்படத்தை திரையிடும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை தமிழகத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

தமிழ் குழு ஒன்றிடம் இருந்து விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்தே அந்த திரையிடல் நிகழ்வு ரத்துச்செய்யப்பட்டதாக பிவிஆர் சினிமா தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் காண்பிக்கப்பட்டால் திரையரங்கு தாக்கப்படும் அத்துடன் அங்குள்ளவர்கள் கடத்தப்படுவார்கள் என்று அளவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பிவிஆர் சினிமாவின் சார்பில் சைலாதிட்டிய போரா என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படம் இலங்கையின் பிரசன்ன வித்தனகேயினால் தயாரிக்கப்பட்டது.

2012ஆம் ஆண்டு அது இலங்கையில் ‘ஒப நெத்துவ ஒப எக்க’ என்ற பெயரில் திரையிடப்பட்டது.

இதில் இந்திய நடிகை அம்ரிதா பாட்டில் நடிகர் சியாம் பெர்ணான்டோ ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகை அமரிதா தமிழ் யுவதியாகவும், பெர்ணான்டோ இளைப்பாறிய இராணுவ வீரராகவும் சித்தரிக்கப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்வதாக கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாத்துகளுக்கு உதவியதால் சாலை விபத்து: கனடா பெண் மீதான குற்றம் நிரூபணம்
Next post திரைப்பட இயக்குநர் ராம. நாராயணன் காலமானார்