திரைப்பட இயக்குநர் ராம. நாராயணன் காலமானார்

Read Time:1 Minute, 39 Second

rama(1)திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ராம.நாராயணன் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 67.

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட இவர், சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை, சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் என்ற உலக சாதனையை தன்வசம் கொண்டிருந்த ராம. நாராயணன், பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர்.

தமிழ் சினிமாவில் விலங்குகளை வைத்தும், அவற்றை முக்கியக் கதாபாத்திரங்களாக வலம்வரச் செய்து இயக்கிய இவரது படங்களே இவருக்கு அடையாளமாக இருந்தன. குறிப்பாக, பக்திப் படங்கள் பலவற்றை கொடுத்தவர் இவர்.

மிகக் குறைந்த பட்ஜெட்டிலும், மிக குறுகிய காலகட்டத்திலும் படங்களை எடுத்து, வணிக ரீதியில் பல வெற்றிகளை இவர் தந்ததும் கவனிக்கத்தக்கது. வீரன் வேலுதம்பி, ஆடி வெள்ளி, துர்கா, ராஜ காளியம்மன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘வித் யூ வித்அவுட் யூ’ என்ற இலங்கைத் திரைப்படம் தமிழகத்தில் ரத்து
Next post பம்பலப்பிட்டியில் தமிழ் வயோதிபரை தாக்கி, 2 இலட்சம் ரூபா மோதிரங்கள் பறிப்பு