தவறான நிலையத்தில் தரையிறங்கிய வியட்நாம் விமானம்: பயணிகள் அதிர்ச்சி

Read Time:2 Minute, 20 Second

006hவியட்நாம் நாட்டில் உள்ள சுற்றுலா தலத்துக்கு சென்ற வியட்ஜெட் விமானம் தவறான விமான நிலையத்தில் தரையிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2011-ல் தொடங்கப்பட்ட இந்த வியட்ஜெட் என்ற தனியார் நிறுவனம் வியட்நாமில் உள்ள 11 முக்கிய நகரங்கள் மற்றும் சிங்கப்பூர், பாங்காங் ஆகிய நகரங்களுக்கு குறைந்த கட்டண விமான சேவையை அறிமுகப்படுத்தியது.

ந்ஹா ட்ரங் என்ற நகருக்கு முதல் விமான சேவையை அறிமுகப்படுத்திய இந்த நிறுவனம், பறக்கும் விமானத்தில் அரைகுறை ஆடையணிந்த பெண்களின் குத்தாட்ட நிகழ்ச்சியை நடத்தி பயணிகளை கவர்ந்தது.

இந்த வியட்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான ஏது 8575 என்ற எண் கொண்ட விமானம் அந்நாட்டில் உள்ள டா லட் என்ற சுற்றுலா தலத்துக்கு 200 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. ஆனால், டா லட் விமான நிலயத்தில் இறங்குவதற்கு பதிலாக அங்கிருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கேன் ரன் விமான நிலையத்தில் அந்த விமானம் இறங்கியதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விமானத்தில் இருந்த விமானி உள்ளிட்ட பணியாளர்களும், தரையிறங்கிய விமான நிலைய ஊழியர்களும் நடைமுறைகளை சரியானபடி கடைபிடிக்காததால் இந்த தவறு நிகழ்ந்து விட்டதாக வியட்நாம் விமான நிலைய முகமையின் இணையதளம் கூறியுள்ளது.

இச்சம்பவத்துக்கு காரணமான விமானி உள்ளிட்ட பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும், விமான நிலைய ஊழியர்கள் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரொனால்டோவை பின் தொடரும் பிரேஸில் மொடல் அழகி
Next post ‘எந்திரன் 2′இல் ரஜினி நடிப்பதில் சிக்கல்; விஜய் அல்லது அஜித்திற்கு வாய்ப்பு?