ஆபாச வீடியோ சர்ச்சைக்சையால் அழகுராணி அந்தஸ்தை துறந்த யுவதி

Read Time:3 Minute, 23 Second

5905delawareporn14n-3-webஅமெரிக்காவின் மாநில அழகுராணி போட்டியொன்றில் இரண்டாமிடம் பெற்ற பின்னர் ஆபாச வீடியோவில் தோன்றியதால் தனது அந்தஸ்தை இழந்த யுவதி, தற்போது மீண்டும் ஆபாச படங்களில் தோன்ற ஆரம்பித்துள்ளார்.

கிறிஸ்டி அல்தாயஸ் எனும் இந்த யுவதி, 2012 ஆம் ஆண்டு பதின்மர் பருவத்தினருக்கான மிஸ் கொலராடோ டீன் யூ.எஸ்.ஏ. மாநில அழகுராணி போட்டியில் இரண்டாமிடம் பெற்றவர். ஆனால், கிறிஸ்டி அல்தாயஸ் தோன்றும் பாலியல் வீடியோவொன்று இணையத்தளங்களில் வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

18 வயது யுவதியாக இருந்தபோது இந்த வீடியோ பதிவுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடும் விமர்சனங்களையடுத்து, அழகுராணி போட்டியில் கிறிஸ்டி அல்தாயஸ் பெற்ற இரண்டாமிடம் கடந்த ஜனவரி மாதம் பறிக்கப்பட்டது.

அத்துடன், மிஸ் யூ.எஸ்.ஏ. அழகுராணி போட்டிகளை நடத்தும் நிறுவனம், தனது இணையத்தளத்திலிருந்து கிறிஸ்டி தொடர்பான சகல தகவல்களையும் நீக்கியது.

பின்னர் கான்சாஸ் பல்கலைக்கழகத்தின் கல்லூரியொன்றில் உயர்கல்வி கற்பதற்காக இணைந்தார். வாழ்க்கையில் கற்ற பாடங்களிலிருந்து அவர் தவறுகளை உணர்ந்து திருந்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது மீண்டும் ஆபாச வீடியோவொன்றில் கிறிஸ்டி அல்தாயஸ் தோன்றியுள்ளார். அவர் பாலியல் படங்களில் நடிப்பதை தொழிலாக மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

5905coதற்போதும் பல்கலைக்கழக மாணவியாக உள்ள கிறிஸ்டி அல்தாயஸ், மேற்படி வீடியோ வெளியான பின் தனது டுவிட்டர் கணக்கையும் அழித்துவிட்டுள்ளார். மிஸ் டீன் யூ.எஸ்.ஏ. அழகுராணி போட்டிகளில் பங்குபற்றியவர்களில் இத்தகைய ஆபாச வீடியோ சர்ச்சைக்குள்ளான ஒரே பெண் கிறிஸ்டி அல்தாயஸ் அல்லர்.

டெலவெயார் மாநிலத்தின் மிஸ் டெலவெயார் டீன் யூ.எஸ்.ஏ. அழகுராணியாக கடந்த நவம்பர் மாதம் முடிசூட்டப்பட்ட மெலிஸா கிங் எனும் யுவதியின் ஆபாச வீடியோவொன்று வெளியானதால் சர்ச்சைக்குள்ளானார்.

வீடியோவில் தோன்றும் யுவதி தானல்ல என ஆரம்பத்தில் மெலிஸா கிங் கூறினாலும் வீடியோவில் காணப்படுபவர் மெலிஸாதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் தனது அழகுராணி பட்டத்தை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடன நிகழ்ச்சிக்கு நமீதா வராததால் ரசிகர்கள் கல்வீச்சு: போலீஸ் தடியடி
Next post தென்கொரியாவில் 5 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற வீரர் மன்னிப்பு கேட்டார்