ரசிகர்களுக்கு பிடித்த நடிகை: சுருதிஹாசனுக்கு முதல் இடம்..!

Read Time:1 Minute, 49 Second

suruthiதென்இந்திய நடிகைகளில் ரசிகர்களுக்கு பிடித்த நடிகை யார் என்பது பற்றி கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த கருத்து கணிப்பை நடத்தியது.

இதில் சுருதிஹாசனுக்கு அதிகம் பேர் வாக்களித்து முதல் இடத்தை அளித்தனர்.

சுருதிஹாசன் சமீபத்தில் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளன. தெலுங்கில் கப்பார் கிங், யவடு, பலுபு, ரேங்குர் ரம் என தொடர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஷால் ஜோடியாக பூஜை படத்தில் நடித்து வருகிறார். இந்தியிலும் 4 படங்கள் கைவசம் உள்ளன.

சினிமாவில் அறிமுகமான போது சுருதிக்கு வரவேற்பு இல்லை. அவர் முதலில் நடித்த இந்தி படம் தோல்வி அடைந்தது. ஆனால் படிப்படியாக ஹிட் படங்களில் நடித்து முன்னணிக்கு வந்துள்ளார்.

சுருதிஹாசனுக்கு அடுத்த படியாக ரசிகர்களுக்கு பிடித்த நடிகை கருத்து கணிப்பில் தமன்னாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

இதுபோல் நயன்தாரா, ஹன்சிகா, காஜல்அகர்வால், ஸ்ரேயா போன்றோரும் பிடித்த முதல் 10 நடிகைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த வருடம் நடந்த கருத்து கணிப்பில் முதல் இடத்தில் இருந்த சமந்தாவுக்கு தற்போது 12–வது இடம் கிடைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை பிரசவத்திற்கு அனுப்பி, மாணவியுடன் உல்லாசம் இருந்த கணவன் நையப்புடைப்பு!
Next post லிங்கா பட ஷூட்டிங்; ரஜினிக்கு டாக்டர்கள் எச்சரிக்கை